சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவா..! அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்.! அதிகாரப்பூர்வ தகவல்.!

0
277

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “சீமராஜா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற தவறியது. மோசமான விமர்சங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் இந்த வாரமே திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

mithran-director

சீமராஜா படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார்.

இரும்புதிரை படத்தை போலவே இந்த படத்திலும் ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு கதையம்சம் இருக்கும் என்று இயக்குனர் மித்ரன் கூறியிருக்கிறார். இந்த படத்தை 24 ஏ எம் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், இந்த படத்தின் மூலம் முதன் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

mithran

சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு ஒன்றிற்க்கு பேட்டியளித்த இயக்குனர் மித்ரன் படத்தின் தகவலை உறுதி செய்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தொடங்கும் என்றும் அந்த பேட்டியில் இயக்குனர் மித்ரன் கூறியுள்ளார். இன்னும் இந்த படத்தின் இதர நடிகர், நடிகைகளின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.