ஆரம்பத்தில் வாய்ப்பிற்காக நான் அதிகம் முயற்சி செய்தது அந்த இயக்குனரிடம் தான் – சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்

0
802
Sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பின் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் நீங்கள் சினிமா துறையில் யாரிடம் அதிகமாக வாய்ப்பு தேடி அலைந்தீர்கள்? என்று கேட்டு இருந்தார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் கூறியது, நான் அதிகமாக வாய்ப்புகள் போய் கேட்கவில்லை. சிலபேரை முயற்சி செய்திருக்கிறேன். அதில் நான் அதிகம் வாய்ப்பு கேட்டது வெங்கட் பிரபு சார் தான். ஏன் அவரிடம் நான் அதிகார ட்ரை பண்ணேன் என்றால்,

சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி:

அவருடைய படங்கள் என்றால் 4, 5 ஹீரோக்கள் இருப்பார்கள். என்னுடைய மைனஸ் எல்லாம் அவருடைய படத்தில் பிளஸ் ஆக்கி விடலாம் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் இரண்டரை மணி நேரம் நம்மளால் ஸ்கீரினில் வந்து பண்ண முடியுமான்னு தெரியாது. ஆனால், அவருடைய படத்தில் நல்ல ஜாலியாக இருக்கும். கூட இருக்கிற நடிகர்களை வைத்து கொண்டு போவது நல்லா இருக்கும். நாமளும் நிகழ்ச்சியில் பேசுவதைப் போல் பேசலாம் என்று நினைத்தேன். இளைஞர்கள் மத்தியில் அவருக்கு நிறைய மரியாதை உண்டு. ஆனால், ட்ரை பண்ணேன் கிடைக்கவில்லை. போய் கேட்டவுடனே வாய்ப்பு கொடுக்கனும் என்ற கட்டாயம் கிடையாது. அதோடு அவருக்கென ஒரு பெரிய சர்க்கல் இருக்கு.

-விளம்பரம்-

முதலில் கிடைத்த பட வாய்ப்பு:

அவர்களில் 4 பேரை வைத்து படம் எடுத்தாலே 10 படங்களுக்கு மேல் பண்ணலாம். அதற்குப் பிறகு இரண்டு முறை படம் பண்ணுவதற்கான மீட்டிங் அமைந்தது. ஆனால், அப்ப வேற ஒரு காரணத்தினால் அமையாமல் போனது. இப்போது அவர்கள் எல்லாம் என்னுடைய படங்களை பார்த்து வாழ்த்து சொல்லும் போது ரொம்ப சந்தோசமாக பெருமையாக இருக்கிறது. அதேமாதிரி வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீ முதலில் இருந்தார். மூன்றாவது இடத்தில் நான் இருந்தேன். ஆனால், இரண்டாவது இடத்தில் யார் என்று தெரியவில்லை.

பட வாய்ப்புக்கு ரொம்ப ட்ரை பண்ணவில்லை:

இருந்தாலும் முயற்சி பண்ணி நடிக்க முடியாமல் போனது. அப்போது அந்த படத்தை எடுத்த இயக்குனர் வேலைக்காரன் படத்தை பார்த்து வாழ்த்தும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. நிறைய வாய்ப்புகள் என்பதை நான் முயற்சி எடுக்க வில்லை. ஏனென்றால் ரூட் கிடைக்கவில்லை. அப்போது எல்லாம் சின்னத்திரை, வெள்ளித்திரை இடையே இடைவெளி ரொம்ப பெரியது. நிகழ்ச்சிக்கு யாராவது வந்தால் அவர்களின் மூலம் வாய்ப்பு கிடைத்தால் உண்டு. இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் அப்போதெல்லாம் கிடையாது. அப்போது நான் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று பெரியதாக ட்ரை பண்ணவில்லை என்று கூறினார். இப்படி சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement