நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு நிலையில் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார். அதே போல இவர் கனா படத்தையும் இயக்கி இருந்தார்.
இதையும் பாருங்க : கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன், ஆனால் – கர்ணன் படத்தில் சொந்த குரலில் பேசாதது குறித்து லால்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா மறைந்திருக்கிறார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தந்து, குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனைவியை இழந்த நிலையில் அவரை கடைசியாக பார்க்க முடியாமல் இருக்கும் அருண்ராஜாவின் நிலையை நினைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் அருண் ராஜாவின் உயிர் நண்பரான சிவகார்த்திகேயன், சிந்துஜாவின் இறப்பிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருகிறார். அந்த வீடியோ தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.