Hat Trick வெற்றியை அடைந்தாரா Sk ? எப்படி இருக்கு ‘Prince’ – முழு விமர்சனம் இதோ.

0
543
prince
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ப்ரின்ஸ். டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் பிரின்ஸ் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் உலகநாதன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருக்கிறார். இவர் தன் குடும்பத்துடன் பாண்டிசேரியில் வசித்து வருகிறார். இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். ஊருக்கே உதாரணமாக விளங்கும் சத்யராஜின் மகனாக மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் அங்குள்ள பள்ளியில் சோசியல் சயின்ஸ் வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார்.

- Advertisement -

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் தான் கதாநாயகி மரியா(ஜெசிகா). இவரை பார்த்தவுடனே சிவகார்த்திகேயன் காதலில் விழுகிறார். பின் அவருடன் பேசி, பழக முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெசிக்காவிடம் சிவகார்த்திகேயன் தன்னுடைய காதலை சொல்கிறார். ஆனால், ஜெசிக்கா அவருடைய காதலை ஏற்க மறுக்கிறார். இதனை அடுத்து ஜெசிக்காவை இம்ப்ரஸ் செய்ய ஒவ்வொரு விஷயத்தையும் சிவகார்த்திகேயன் செய்கிறார். இதனால் ஜெசிகாவிற்கும் காதல் மலர்கிறது.

பின் சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய காதலை ஜெசிக்கா சொல்கிறார். அதனை அடுத்து சிவகார்த்திகேயனும் தன்னுடைய தந்தை சத்யராஜ் இடம் ஜெசிக்காவை அறிமுகப்படுத்தி நான் காதலிக்கும் பெண் என்று கூறுகிறார். இதனால் ஆனந்தத்தில் சத்யராஜ் துள்ளி குதிக்கிறார். ஆனால், தன்னுடைய மகன் காதலிக்கும் பெண் ஒரு பிரிட்டிஷ் பெண் என்று தெரிந்தவுடன் சத்யராஜ் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். காரணம், சத்யராஜின் தாத்தாவை சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் கொன்றதால் பிரிட்டிஷ் மீது சத்யராஜுக்கு தீராத கோபம் இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் ஜெசிக்காவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொள்ள சத்யராஜ் மறுக்கிறார். இன்னொரு பக்கம், ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தன்னுடைய காதலி ஜெசிக்காவை சிவகார்த்திகேயன் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் என எல்லா விதத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடனத்தில் பின்னி எடுத்திருக்கிறார். இவரை அடுத்து உலகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் தன்னுடைய தந்தைக்குரிய பாணியில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மரியா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார். இவர் முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார் என்றே சொல்லலாம்.
படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஆனால், இது ஒரு எளிமையான கதை தான்.

இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் நகைச்சுவைகள் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. இதனால் காமெடி எல்லாம் படத்திற்கு செட்டாகவே இல்லை என்று சொல்லலாம். பின்னணி இசை, பாடல்களும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. நடன இயக்குனருக்கு ஒரு தனி பாராட்டை கொடுக்கலாம். மற்றபடி நடிகர்கள் தங்கள் வேலையை சரியாக செய்தாலும் இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதத்தில் மொத்தமாக சுதப்பி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு பிரின்ஸ் படம் மிகுந்த ஏமாற்றம் என்றே சொல்லலாம். படம் ரொம்ப சுமாரான படமாக தான் இருக்கிறது.

பிளஸ்:

சிவகார்த்திகேயன் நடிப்பு, நடனம்.

பாடல்கள், ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

மைனஸ்:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒரு எளிமையான கதை தான்.

நகைச்சுவைகள் பெரிதாக படத்திற்கு செட் ஆகவில்லை.

ஒரு வழக்கமான காதல் கதை தான் தவிர மற்றபடி படத்தில் பெரிதாக பேசப்படும் அளவிற்கு எந்த ஊரு காட்சிகளும் இல்லை.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து டான் படம் எப்படியோ தப்பித்து விட்டது. ஆனால், பிரின்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைய வாய்ப்பில்லை. இதனால் hat Trick வெற்றியை சிவகார்த்திகேயன் தவறவிட்டுவிட்டார். இந்த தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படம் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது.

Advertisement