தன் சம்பளத்தை முழுசாக கொடுத்த சிவகார்த்திகேயன்.! யாருக்கு..ஏன்..? நெகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

0
702

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது படலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் தான் பாடல் எழுதியதன் மூலம் சம்பளமாக பெற்ற பணத்தை நடிகர் சிவகார்த்திகயேன் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு அளித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sivakarthikeyan

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் போன்றவர்கள் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான “கல்யாண வயசு” என்ற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பாடல் எழுதியதற்காக தனக்கு சம்பளமாக கொடுக்கவிருக்கும் பணத்தை மறைந்த பாடல் ஆசிரியர் நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு வழங்கிவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணமே நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான “மெரினா” படத்தில் நா. முத்து குமார் மூன்று பாடல்களை எழுதியுள்ளார்.

namuthukumar

அதே போல சிவகார்த்திகேயன் நடித்த “கேடி பில்லா கில்லாடி ரங்கா ” படத்தில் நா.முத்துகுமார் எழுதிய “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ” என்ற பாடல் விஜய் அவார்ட்ஸில் அந்த ஆண்டின் சிறந்த பாடல் என்ற விருதினையும் பெற்றது. இப்படி சிவகார்த்திகேயன் படத்தில் நா. முத்துக்குமார் பல வெற்றி பாடல்களை பாடல்களை எழுதியுள்ளார். இதற்கு கைமாறாக தனது அன்பை இப்படி வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சிவா.