இரண்டாம் குழந்தைக்கு பின் ஆளே மாறியுள்ள skவின் மனைவி – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

0
2172
sk
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். மேலும், கனா படத்தில் இவர் பாடிய ‘வாயாடி பெத்தப் புள்ள’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயனின் மகன் :

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று தனது மகன் தனது கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

மகனுக்கு வைத்த பெயர் :

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், தனது மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்து இருந்தார். இதுகுறித்து புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயன். தனது மகனுக்கு அவரது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படம் :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருந்தார் சிவகார்த்திகேயன். அப்போது முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது மனைவி மற்றும் சிலருடன் எடுத்த அந்த புகைப்படம் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

வெற்றிபெற்ற டான் படம் :

சிவகார்த்திகேயன் இறுதியாக நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தை தொடர்ந்து டான், ஐயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், முதல் மூன்று நாளில் எதிர்பார்த்ததை விட வசூல் மழையை குவித்து வருகிறது.

Advertisement