சிவகார்த்திகேயன் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?

0
955
sk
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுப்பாளராகவும் , காமடியனாகவும் சிவகார்த்திகேயன் தொடங்கினார். பின் தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த டாக்டர் படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

- Advertisement -

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்:

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பொதுவாகவே கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது தான் படங்களை தயாரிப்பார். தற்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

இதனால் தமிழ் திரையுலகில் பலரும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் உடைய புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் ஒரு குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் கையில் உள்ள குழந்தை:

அந்த குழந்தை யாரென்றால், அயலான் படத்தை இயக்கி வரும் ரவிக்குமாரின் மகள் தான். இயக்குனர் ரவிக்குமாரின் மகளைத்தான் சிவகார்த்திகேயன் தன் கையில் தூக்கி வைத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் வைத்து அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அயலான் படம் பற்றிய தகவல்:

மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாகவும், குழந்தைகளை கவரும் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற

Advertisement