‘தேங்க்யூ தம்பி’ – கேடி பில்லாவிற்கு கில்லாடி ரங்காவின் நெகிச்சியான பதில். பாராட்டு மழையில் நினையும் விமல்னா.

0
483
vimal
- Advertisement -

நடிகர் விமல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ‘தேங்க்யூ தம்பி’ என்ற பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து பிறகு தன்னுடைய கடும் உழைப்பினால் கதாநாயகன் ஆனார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விலங்கு. இது ஒரு வெப் சீரிஸ் ஆகும்.

- Advertisement -

விலங்கு படம் நடிகர்கள்:

இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார்கள். அதில் நடிகர் விமல், நடிகை இனியா, இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ், தயாரிப்பாளர் மதன் மற்றும் ஜி5 குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய விமல் விலங்கு மூலம் தான் re-entry ஆவதாக கூறினார்.

விலங்கு படம் பற்றிய தகவல்:

அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த திரைப்பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தது, தனக்கு பல அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், விலங்கு என்ற வெப் தொடர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் விமல் காவல்துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார். ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலையை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக விமல் வருகிறார். இந்த படத்தில் கடைசி வரை கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு:

இதனால் இயக்குனருக்கு கிளாப்ஸ் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த விலங்கு தொடரை சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு அவர் கூறியது, இந்த வெப் தொடரில் நடிப்பு, உருவாக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் சிறப்பாக இருந்தது. விமலின் நடிப்பும், பிரசாந்தின் இயக்கமும் அருமையாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நன்றி. மேலும், பாலசரவணன் மற்றும் கிச்சு ஆகியவர்களுக்கு தன்னுடைய சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

விமல் அளித்த பதில் டீவ்ட்:

சிவகார்த்திகேயன் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நடிகர் விமல் தேங்கியூ தம்பி என்று தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். இப்படி இவர்கள் இருவரின் பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், சிவகார்த்திகேயனும், விமலும் சேர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சேர்ந்து நடித்து இருந்தார்கள்.அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் திரைப்பயணம் மாறியது.

Advertisement