சிவகுமார் சால்வை சர்ச்சை – சால்வை அணிவிக்க வந்த இவர் யார் தெரியுமா? சால்வை சிவகுமார் தூக்கி எரிய காரணம் இதுதானாம்.

0
604
Sivakumar
- Advertisement -

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டத்தில் பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார் கலந்து கொண்டிருந்தார். மேடையில் அவர், பழ கருப்பையா குறித்து பல விஷயங்களை புகழ்ந்து பேசி தன்னைவிட இரண்டு வயது குறைவாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது தவறில்லை என்று அவர் காலில் விழுந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து மேடையில் சிவகுமாரின் ரசிகர் ஒருவர், அவருக்கு சால்வை கொடுக்க நின்றிருந்தார். இதை பார்த்து சிவகுமார், அந்த ரசிகருடைய கையில் இருந்த சால்வையை வேகமாக பிடுங்கி கீழே போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்தபோது அவருடைய போனை போனை சிவகுமார் தள்ளி விட்டிருந்தார்.

- Advertisement -

நெட்டிசன்கள் கேள்வி:

அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சிவகுமார் தன்னுடைய ரசிகர்களிடம் இப்படி நடந்து கொண்டிருப்பது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. பலருமே, வயதான நபர் என்று கூட பார்க்காமல் சிவகுமார் செய்தது ரொம்ப தவறு. இவரின் செயலை பார்த்து அந்த நபருடைய முகமே வாடிவிட்டது. ஒரு நடிகர் என்பதைவிட ஒரு மனிதராக சிவகுமார் நடந்து கொள்வது சரியா?என்றெல்லாம் நெட்டிசன் கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

யார் அந்த பெரியவர் :

இப்படி ஒரு நிலையத்தில் இந்த சம்பவத்தின் உண்மை நிலை தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது சிவகுமாருக்கு சால்வை போட வந்த பெரியவரின் பெயர் கரீம், மேலும் அவர் சிவகுமாரின் 58 கால நண்பராம். அவர் சால்வை போட வந்த போது விளையாட்டாக சிவகுமார் அதனை பிடிங்கி எறிந்தாராம். இதுகுறித்து பக்கத்தில் பதிவிட்டுள்ள பயனர் ‘ மீடியாக்கள் குறிப்பிடும் வயோதிக ரசிகர் பெயர் திரு. கரீம். திரு சிவகுமாருக்கு 58 ஆண்டு கால நண்பர்.

-விளம்பரம்-

58 ஆண்டு நண்பர் :

அவர் திருமணம், அவர் பிள்ளைகள் திருமணம் எல்லாம் செய்த போது குடும்ப விசேஷத்தில் முன்னின்றவர் சிவகுமார். அவரின் பேரன் பேத்திகளைக் கொஞ்சம் அளவு குடும்பத்தில் நெருக்கம். அந்த இஸ்லாம் நண்பரைப் பற்றி சிவகுமார் இந்து தமிழ்திசையில் எழுதிய திரைப்படச் சோலை தொடரில் விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்டவரிடம் இப்போது நடந்த நிகழ்வில், ‘ எனக்கு சால்வை போடறதே பிடிக்காது. தெரிஞ்சுகிட்டே ஏன் இப்படி செய்யறே?’ ன்னு உரிமையுடன் பிடுங்கிப் போட்டிருக்கார். நடந்தது அவ்வளவுதான்.

செல்போன் விவகாரம்

இதைத்தான் ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி திரித்து தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது சில செய்திச் சேனல்கள். ஏற்கனவே செல்ஃபோன் விவகாரத்தில் சிவகுமாரை சீண்டிப் பார்த்தவர்களுக்கு இப்போது இது அல்வா போல ஆகி விட்டது. சம்பந்தப்பட்ட இஸ்லாம் பெரியவரே, அவர் குடும்பமே, இது தவறான செய்தி, உடனடியாக இதை டெலீட் செய்யாவிட்டால் சேனல்கள் மீது வழக்குத் தொடருவேன் என்று தெரிவித்தும் யாரும் அடங்குவதாய்த் தெரியவில்லை.

பொய்யைப் பொருந்தப் பேசினால் உண்மை திரு திருன்னு விழிக்குமாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. இப்போ எல்லாம் பொய்யைப் பொருந்தக் கூட பேச வேண்டாம். இப்படி ஒரு வீடியோ காட்சி மட்டும் கிடைச்சா போதும் எல்லா உண்மையையும், சத்தியத்தையும், பத்திரிகை தர்மத்தையும் கூட குழி தோண்டிப் புதைச் சுடுவாங்க நம் பரபரப்பு ஊடக வியாதிகள். கண்ணால் காண்பதும் பொய் ; காதால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப்பதே மெய் என்று மூத்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு அர்த்தம் இதுதானோ?’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement