அருண் விஜயின் அம்மாவால் தான் நான் அதை கற்றுக் கொண்டேன் என்று வனிதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் வனிதா விஜயகுமார். தற்போது இவர் தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.
திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.
வனிதா நடிக்கும் படங்கள்:
இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா நடித்து வருகிறார்.
வனிதாவின் யூடியூப் சேனல் :
மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜயகுமாரின் பேத்திக்கு தியாவிற்கு திருமணம் நடைபெற்றது
விஜயகுமார் பேத்தி திருமணம்:
பொதுவாக விஜயகுமார் குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஒன்று கூடி விடுவார்கள். கடந்த வாரம் மெஹந்தி பங்ஷன், சங்கீத் பங்ஷன், ஹல்தி பங்ஷன் என திருவிழா போல் விஜயகுமார் வீடு இருந்தது. சில தினங்களுக்கு முன் தியாவிற்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கம்போல் வனிதா தான் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தியா திருமணத்திற்கு தன்னை யாரும் அழைக்காதது குறித்து வனிதா தன்னுடைய பதிவில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றார். அதோடு வனிதா-விஜயகுமார் குறித்த விடியோக்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வனிதா பேட்டி:
அந்த வகையில் சமீபத்தில் நடிகை வனிதா அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், என்னுடைய அம்மா ரொம்ப சமைக்க மாட்டார்கள். காரணம், அவர்கள் சினிமாவில் பிஸியாக இருந்தார். அந்த நேரத்தில் எங்களுக்கு விதவிதமாக சமைத்து கொடுத்தது அருண் விஜய் அண்ணாவோட அம்மா தான். பெரியம்மா நல்லா சமைப்பாங்க. அவங்களோட சமையல் ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு அவங்க சமையல் பார்த்து தான் சமைக்க வேண்டும் என்று ஆர்வமே வந்தது. அதற்கு பிறகு எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்து நானும் சமைக்க ஆரம்பித்தேன். இருந்தாலும், அவர்களுடைய சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கும். எங்க அம்மா எப்பவாவது ஒருமுறை சில சாப்பாடு செஞ்சு தருவாங்க அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார்.