‘காமராஜர்லாம் அப்போது உதவி செய்யவில்லை’ – அகரம் விழாவில் பேசிய சிவகுமார்.

0
1471
- Advertisement -

காமராஜரெல்லாம் அப்போது உதவவில்லை என்று நிகழ்ச்சியில் சிவகுமார் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்றிருக்கிறது. இவர் சினிமா உலகில் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார். இதை எல்லாம் இவர் அகரம் அறக்கட்டளையின் மூலம் செய்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனர் நடிகர் சூர்யா, சிவகுமார் ஆவார்.

- Advertisement -

அகரம் அறக்கட்டளை :

இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இதை ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவர்கள் பல வருடங்களாக செய்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதை எடுத்து செய்து வருகிறார். சமுதாயத்தின் பின் தங்கி உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை தேடி சென்று படிக்க நிதி உதவி வழங்க பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா.

44 வது சிவகுமார் கல்வி விருதுகள் :

இதில் பல பேர் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக 44 வது சிவகுமார் கல்வி விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த அறக்கட்டளை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக்கட்டளையின் மூலம் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நிறைவு விழா நடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சிவகுமார் சொன்னது:

இந்த விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார்கள். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி கலந்து கொண்டிருந்தார்கள். பின்னர் மேடையில் சிவகுமார் கூறியது, எங்கள் அம்மா என்னுடைய படிப்பிற்காக அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு நான் ஹை ஸ்கூல் போனேன். காமராஜர் எல்லாம் அப்போது எங்களுக்கு உதவி செய்யவில்லை. கட்டணம் கட்டி தான் படித்தோம். மொத்த பள்ளி படிப்புக்கும் 750 ரூபாய் மட்டும்தான் செலவு செய்தேன். ஆனால், இப்போது கார்த்தியின் குழந்தைக்கு ப்ரீ கேஜிக்கு 2.50 லட்சம் கேட்கிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

கல்வி குறித்து சொன்னது:

வாத்தியார்களில் ஜாதியை பார்க்காதீர்கள். எங்களுக்குள் இருந்தவர்கள் எல்லோரும் பிராமண வாத்தியார்கள் தான். பத்து வாத்தியார்களில் எட்டு பேர் அவர்கள் தான். அவர்களெல்லாம் வாத்தியார்கள் அல்ல கடவுள்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். எனக்கு 81 வயது. சமீபத்தில் திருக்குறளை நாலு மணி நேரம் நிறுத்தாமல் பேசி இருக்கிறேன். என்னுடைய குருநாதர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆரும் தான். இருவரும் 71, 72 வயதில் போய்விட்டார்கள். நான் 81 வயதில் பேசிக் கொண்டிருக்கிறேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை, ஒழுக்கத்திற்காக சொல்கிறேன். மகிழ்ச்சியான வாழ்வை எல்லோரும் வாழ வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement