சபதத்தில் வென்றாரா ஆதி ? – ‘சிவகுமாரின் சபதம்’ முழு விமர்சனம்.

0
2783
sivakumar
- Advertisement -

ஹிப்ஹாப் ஆதி எழுதி, இயக்கி, இசை அமைத்து இன்று வெளியாகியிருக்கும் படம் சிவகுமாரின் சபதம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் மாதுரி ஜெயின், ஆதித்யா கதிர், ராகுல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படம் இன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்…

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

காஞ்சிபுரத்தில் வசித்து வரும் வரதராஜன் என்பவர் நெசவு தொழிலாளி. இவர் நெசவுத் தொழிலை தனது பரம்பரைத் தொழிலாக செய்துவருகிறார். பின் ஏதோ ஒரு காரணத்தினால் நெசவு தொழிலை விடுகிறார் வரதராஜன். தனது தாத்தா வரதராஜன் போலவே நெசவு செய்யவில்லை என்றாலும் பட்டுப்புடவை விற்கும் தொழிலில் ஈடுபாட்டுடன் இருக்கிறார் கதாநாயகன் சிவகுமார் என்கிற ஹிப்ஹாப் ஆதி. சிவகுமாரின் சித்தப்பாவாக வரும் முருகன் சிறுவயதிலிருந்தே தனக்கு அதிகமாக பாசம் கிடைக்காத காரணத்தினால் இளம் வயது வந்தவுடன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க ஹீரோ வழக்கம் போல் தன் நண்பர்களுடன் ஊரை சுற்றி கொண்டு திரிகிறார். பின் திடீரென ஏற்படும் பிரச்சினையால் ஹீரோவும், அவருடைய நண்பரும், தாத்தா வரதராஜனும் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களை காப்பாற்ற மிகப்பெரிய தொழிலதிபர் சந்திரசேகரின் மருமகனாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் சித்தப்பா முருகன். இனி சிவகுமார் காஞ்சிபுரத்தில் இருந்தால் வாழ்க்கையில் உருப்பட மாட்டான் என நினைத்து சிவகுமாரை தன்னுடைய சித்தப்பாவுடன் அனுப்பி வைக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிறகு பழைய காதலியை சிவகுமார் சந்திப்பதால் மீண்டும் அவர்களுக்கு காதல் மலர்கிறது. ஹீரோ, ஹீரோயின் ஒன்றாக சேர்ந்து ஊரை சுற்றிக் கொண்டிருப்பதை ஹீரோயினோட மாமா பார்த்து விடுகிறார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு சிவகுமாரை அடிக்கிறார்கள். இதனால் கோபமடைந்த சித்தப்பா தனது மனைவியின் தம்பி என்று கூட பார்க்காமல் பிரச்சினை செய்கிறார். இப்படியே தொடர்ந்ததால் மிகப்பெரிய பிரச்சனைகளில் சிவகுமாரும் அவருடைய சித்தப்பாவும் சிக்கிக்கொள்கிறார்கள். அப்போது தன்னுடைய சித்தப்பாவிற்காக சிவகுமார் சபதம் போடுகிறார்.

அந்த சபதத்தில் சிவகுமர் ஜெயித்தாரா? இல்லையா? வரதராஜனின் நெசவுத்தொழில் சிவகுமாரால் காப்பாற்றப்பட்டதா? இறுதியில் சிவகுமார் கதாநாயகி கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வழக்கம்போல எல்லா படத்திலும் காண்பிக்கும் மாதிரி விவசாயத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். படம் காமெடி படமா? ஆக்ஷன் படமா? எந்த பாணியில் கதை இருக்கிறது என்று புரியாத அளவிற்கு படம் சென்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்தபோது பலரும் பலவிதமாக கலாய்த்து இருந்தார்கள். தற்போது தியேட்டரில் அந்த பாடல்களை கேட்டதால் ரசிகர்கள் காதில் கேட்க முடியாத அளவிற்கு கழுவி ஊற்றி உள்ளார்கள். மீசையை முறுக்கு படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆதிக்கு இந்த படம் மிகப்பெரிய தோல்வி என்று சொல்லலாம்.

வழக்கம் போல ஊர் சுற்றும் வாலிபன், தன்னுடைய பரம்பரை தொழில், காதலியின் வீட்டில் சண்டை என்று எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் ஆதி. காமெடி என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு படத்தில் நகைச்சுவை இருந்தது. வழக்கமான கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் கழுவி ஊற்றினார்கள்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்கள்.

நெசவு தொழில் பற்றி கதை அமைந்துள்ளது. வேறு எதுவும் சொல்லி கொள்ளும் அளவிற்கு கதை இல்லை.

மைனஸ்:

இன்னும் கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு கதை அமைந்துள்ளது.

படத்தின் பாடல்கள் அணைத்து மாரியம்மன் திருவிழா மைக் செட்டில் கேட்பது போல கரோ மொரோ என்று தான் இருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு சிவகுமாரின் சபதம் மிகப்பெரிய ஏமாற்றம் தான்.

இது இந்த படத்தை சீரிஸ்ஸாக பார்க்க வேண்டுமா இல்லை காமடியாக பார்க்க வேண்டுமா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிவகுமாரின் சபதம்–பாகுபலிக்கு ஒரு ‘கட்டப்பா’ ஒரு தடவ பாக்குறதே கஷ்டம்பா

Advertisement