தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர் சிவசங்கர். இவருடைய நடனத்திற்கு இதுவரை யாரும் இணை இல்லை என்று சொல்லலாம். இதுவரை இவர் பத்து மொழிகளில் 800 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார். இவருக்கு சிறந்த நடன இயக்குனர் என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய பரதநாட்டியமும், அந்த நடன பாவத்தையும் யாராலும் செய்ய முடியாது. அந்த அளவிற்கு அழகாக எடுத்து காண்பிப்பார். அதே மாதிரி அஜித்தின் வரலாற்று படத்தில் நடன இயக்குனராக சிவசங்கர் அவர்கள் பணி புரிந்திருந்தார். 2006 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வரலாறு. இந்த படத்தை முதலில் காட்பாதர் என்ற தலைப்பை வைத்து இருந்தார்கள். பிறகு வரலாறு என்று மாற்றப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார்.
இந்த படத்தில் அஜித் குமர், அசின், கனிகா, சுப்பிரமணியம், ரமேஷ் கண்ணா, சுஜாதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். அப்பா அஜீத் பரதநாட்டிய கலைஞராக நடித்து உள்ளார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அஜித் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்று பார்த்தால் அது சிவசங்கர் மாஸ்டர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் டான்ஸர் சிவசங்கர் அவர்கள் வரலாறு படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
இதையும் பாருங்க : கைதி படத்தின் இந்தி ரீ-மேக்கிற்கு போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்.
அதில் அவர் கூறியது, வரலாறு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. நான் வந்து நளினமான நடனம் ஆடுவேன். நான் அப்படி தான் பழகி வாழ்ந்திருக்கிறோம். முதலில் கமலஹாசன் வைத்து தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தார்கள். ஆனால், கமல் அப்போது பிஸியாக இருந்ததால் அதற்கு பிறகு தான் அஜித் அவர்களை வைத்து படம் இயக்கினார்கள். பின் இயக்குனர் என்னிடம் நீங்கள் இந்த படத்தில் இருபத்தைந்து நாள் இருக்க வேண்டும் என்று கூறினார். ஏன் அவ்வளவு நாட்களாக நடனம் எடுக்கப்படுகிறதா? என்று கேட்டேன். இல்லை காட்சிகளும், சண்டைக் காட்சிகள் வேண்டும்.
நான் என்ன மாதிரி சொல்கிறேனோ, அது மாதிரி நடித்து காண்பியுங்கள் என்று சொன்னார் இயக்குனர். அப்போது படத்தின் முதல் காட்சி எடுக்கப்பட்டது. கீழே பாத்திரம் விளக்கி இருக்கும் பெண்கள் இந்த மாதிரி ஒரு பையனுக்கு போய் இந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்து உள்ளார்களே? என்னடா கொடுமை என்று அவர்கள் அஜித்தை கிண்டல் பேசும் காட்சி. அப்போது அஜித் மாடியில் நின்று பார்ப்பார். அந்த காட்சியில் என்னை நடித்து காண்பியுங்கள் என்று சொன்னார். நான் எதிர்பார்க்கவே இல்லை. அஜித் நான் நினைத்ததை விட பிரமாதமாக நடித்தார்.
இயக்குனர் என்னிடம் வந்து இந்த நளினத்தை சொல்லிக் கொடுப்பவர்கள் யாரும் கிடையாது. இது சிவசங்கரால் மட்டும் தான் முடியும் என்று சொன்னார். அஜித்துக்கு நடனம் ஆடத் தெரியவில்லை என்றாலும் சொல்வதை விட பிரமாதமாக செய்திருந்தார். எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது அஜித்தும், இயக்குனரும் தான். இந்த அளவிற்கு பிரபலமானதக்கு வரலாறு படமும் காரணம் என்று சொல்லலாம் என்று கூறினார்.