சினிமாவிற்கு வரும் முன் இப்படி ஒரு வேலை செய்தாரா SJ சூர்யா.! நடிகர்களுக்கு எடுத்துக்காட்டு.!

0
407
Director-Sj-surya

தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருந்து பின்னர் நடிகர்களாக மாறியவர்கள் பல பேர் இருக்கின்றனர். அதில் எஸ் ஜே சூர்யா ஒரு சிறப்பான இயக்குனர் மற்றும் நடிகரும் கூட. இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் எஸ் ஜே சூர்யா சினிமாவிற்கு வருவதற்கு முன்னாள் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா.

sj surya

சென்னை லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்த எஸ் ஜே சூர்யா, சினிமாவில் கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அதுவரை தனது செலவிற்காக ஹோட்டலில் வேலை பார்த்தபடியே பல சினிமா இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார்.

அதன் பின்னர் இயக்குனர் பாக்கியராஜ், பாரதி ராஜா போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்படியே ஒரு சில படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார்.அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறியுள்ளார்.

SJ Surya

அந்த கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” என்ற பெயரில் அந்த படத்தை எடுத்தார். அதன் பின்னர் விஜய்யை வைத்து “குஷி ” படத்தை இயக்கினார். அந்த படத்தில் தன்னை ஒரு நடிகனாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்திக் கொண்ட எஸ் ஜே சூர்யா, பின்னர் “நியூ” படத்தில் தன்னை ஒரு கதாநாயகனாக மாற்றிக்கொண்டார். சமீபத்தில் வெளியான “ஸ்பைடர், மெர்சல் “போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த வில்லன் நடிகராகவும் நிரூபித்துள்ளார்.