‘தலைவரே Accountஅ hack பண்ணிட்டாங்களா’ 31வயது நடிகையை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்ட Sj சூர்யாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1779
SJSurya
- Advertisement -

கியாரா அத்வானி பிறந்தநாளுக்கு எஸ் ஜே சூர்யா பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இவர் இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் குஷி படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக மிரட்டி இருந்தார்.

- Advertisement -

எஸ்.ஜே.சூர்யா திரைப்பயணம்:

இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்று இருந்தது.

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படங்கள்:

கடைசியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து பல படங்களில் எஸ் ஜே சூர்யா கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கியாரா அத்வானி. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.கே. சூர்யா அவர்கள் பதிவு ஒன்று போட்டிருந்தார்.

-விளம்பரம்-

எஸ்.ஜே.சூர்யா பதிவு:

அதில் அவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கியாரா அத்வானி. ஸ்ரீதேவி மேடம்க்கு அடுத்த பிறகு சினிமாவில் அழகான திறமையான நடிகையாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த வருடம் உங்களுக்கு சிறந்த வருடம் ஆக அமையும் என்று பாராட்டி பதிவிட்டிருந்தார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கேலி செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் இதெல்லாம் உங்களுக்கு தேவையா தலைவரே? கியாரா அத்வானிக்கு சிம்பு பண்ணலாம். நீங்க பண்ணலாமா, தப்பு இல்லையா என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

கியாரா அத்வானி குறித்த தகவல்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் கியாரா அத்வானி. இவர் 2014இல் வெளிவந்த கபீர் சதானந்த் இயக்கிய புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் இந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்ட தோனி படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் RC15 என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

Advertisement