“ஒ.பி.எஸ் அண்ணா மிகப்பெரிய தலைவர் தமிழக மக்களுக்காக அரும்பாடு பட்டவர்”- ஒ.பி.எஸ்ஸை புகழ்ந்த அண்ணாமலை.

0
1184
- Advertisement -

“ஓபிஎஸ் நல்ல மனிதர் மக்களுக்காக வழந்து கொண்டு இருபவர்கள்” என ஒ.பி.எஸ் புகழ்ந்து பேசிய தமிழக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷா அவர்கள் ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரை தொடங்கி வைத்தனர்.  ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூட்டணியில் உள்ள கட்சிகளை பற்றியும் அதிமுக, ஒ.பன்னீர்செல்வம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அண்ணாமலை கூறியது:

பாஜக இந்தியாவில் மிக பெரிய கட்சி என்றும் நமது கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்க பட்ட கட்சிகளுக்கு மட்டுமே எங்கள் தலைவர்கள் அழைப்புகளை விடுத்தனர் என்றும் அவர் கூறினார். மேலும் கூறிய அவர் கட்சி வளரவேண்டும் என்று நினைக்கிறோம், பாஜக இன்னும் மக்களிடையே நெருங்கி செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். ஒ.பி.எஸ் கூறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்க்கு பதிலளித்த அண்ணாமலை ஒ.பி.எஸ் அண்ணா மிகப்பெரிய தலைவர் தமிழகத்தில் என்றும்,

-விளம்பரம்-

அவர் மக்களுக்காக அரும்பாடு பட்டவர் என்றும் ஒ.பி.எஸ் புகழ்ந்து பேசினார். மேலும் பேசிய அண்ணாமலை ஒ.பி.எஸ் அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தவர் அவர் மக்கள் பணிகளை செய்தவர் என்றும் தொடர்ந்து மக்கள் பணியை செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் கூறுகையில் நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை இவர்கள் தவறானவர்கள் என்று சொல்வது எங்கள் வேலை இல்லை என்றும் பாஜக தனது வேலையை செய்து கொண்டிருக்கிறது என்றும்,அதிமுக அதிகார கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் அண்ணாமலை கூறினார்.           

Advertisement