54 வயதில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு திருமணம் – குடும்பத்தினர் எடுத்துள்ள முடிவு.

0
540
Sjsurya
- Advertisement -

நடிகர் எஸ் ஜே சூர்யா திருமணம் செய்துகொள்ளும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

-விளம்பரம்-

அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது.

- Advertisement -

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். பின் இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்று இருந்தது. பின் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஆண்டு மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகி உள்ள இறவாக்காலம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்கள் பொம்மை போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

எஸ் ஜே சூர்யா திருமணம் :

இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா திருமணம் செய்துகொள்ளும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு 54 வயதாகிறது. ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இதற்காக மணப்பெண்ணை எஸ் ஜே சூர்யா குடும்பத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து எஸ் ஜே சூர்யா தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement