எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு குறித்து ரசிகர் போட்டிருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய படங்களின் மூலம் பல முன்னணி நடிகர்களின் வாழ்க்கையே உச்சத்திற்கு மாறியது என்று சொல்லலாம்.
அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்:
அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ். ஜே. சூர்யா நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்தது.
டான் படம்:
இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார். அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா குறித்து ரசிகர் போட்ட டீவ்ட்:
இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்நிலையில் டான் படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா குறித்து ட்வீட் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நல்ல டைரக்டர். ஏன் இப்படி வராத நடிப்பை பிடித்து தொங்கி வீணா போராருனு நினைச்சிருந்தேன். ஆனா, இப்படி ஒரு terrific performer அ தனக்குள்ள வைத்திருப்பார் என்று நினைத்ததே இல்லை.
எஸ் ஜே சூர்யாவின் பதில் டீவ்ட்:
அவர் தொடர்ந்து அனைத்து படங்களிலும் ஜீனியஸ் லெவல் பர்பாமன்ஸ வெரட்டியாக காட்டி இருக்கிறார் என்று கூறி எஸ் ஜே சூர்யா நடித்த படங்களின் போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த எஸ் ஜே சூர்யா அந்த ரசிகரின் பதிவை லைக்ஸ் செய்து நன்றி என்று இமோஜி பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த அந்த ரசிகர் நீங்களே எழுதி, டைரக்ட் பண்ணி நடிக்கவும் செய்தா எஸ் ஜே சூர்யா ரசிகர்கள் ரொம்ப சந்தோஷப் படுவார்கள். நீங்கள் இயக்கி நடிக்கும் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எஸ் ஜே சூர்யாவை பாராட்டி கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.