நான் முன்ன மாதிரி இல்ல, மாறிட்டேன் – கிரண் வீடியோவை கேட்ட Sj சூர்யா அளித்த பதில். அப்படி என்ன கேட்டுள்ளார் பாருங்க.

0
3527
sjsurya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனரும் ஆனவர் எஸ் ஜே சூர்யா. இவருடைய இயக்கத்திலும் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஆரம்பத்தில் இவர் இயக்கிய வாலி, குஷி ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. பின்னர் அந்த படத்தை தொடர்ந்து நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யா இயக்கி, நடித்த நியூ படம் 2004 ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சிம்ரன், தேவயானி, கிரண் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

ஆனால், முதன் முதலில் இந்த படத்தில் அஜீத் தான் நடிக்க இருந்தார்.சொல்லப்போனால் இந்த படத்திற்காக நடிகர் அஜித் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் தான் அஜித் ‘அட்டகாசம்’,’ ஜனா’ போன்ற இரண்டு படங்களில் கமிட் ஆகி இருந்ததால் நியூ படத்தில் அஜீத்தால் நடிக்க முடியாமல் போனது. இதனால் இந்த படத்தில் தாமே நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் எஸ் ஜே சூர்யா.

இதையும் பாருங்க : ஆர்யாவை ‘Beast’ என்று சொன்னதால் திட்டிய விஜய் ரசிகர் – அஞ்சனா கணவர் கொடுத்த செருப்படி பதில்.

- Advertisement -

இந்த படத்தில் சிம்ரன் மற்றும் கிரனை கிளாமரில் தாராளம் காண்பிக்க வைத்தார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான அ ஆ, கல்வனின் காதலி, வியாபாரி போன்ற படங்களில் டபுள் மீனிங் வசனங்களை பேசி நடித்ததோடு இவருடன் நடித்த நயன்தாரா, தமன்னா என்று பல நடிகைகளுடன் படு ரொமான்ஸாக நடித்து இருந்தார் எஸ் ஜே சூர்யா.

இப்படி ஒரு நிலையில் நியூ படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பல ரசிகர்களும் இந்த படம் குறித்து ட்வீட் செய்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘மார்கண்டேயா’ பாடலை யூடுயூபில் அப்லோட் செய்யுமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா, அந்த பாடல் படு ஹாட்டா இருக்கும் அதுனால அப்லோட் பண்ண முடியாது என்றார்.

-விளம்பரம்-

அது இல்லனாலும் பரவாயில்ல எஸ் ஜே சூர்யா போர்ஷனயாவது போடுங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா, அந்த எஸ் ஜே இப்போ ரொம்ப நல்ல பையன் ஆயிட்டான் என்று கூறியுள்ளார். இடையில் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. நண்பன் படத்திற்கு பின் இவர் நடித்த மெர்சல், இறைவி, ஸ்பைடர் போன்ற படங்களில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் பாரட்டப்பட்டது. அதநால் எஸ் ஜே சூர்யா அதே டிராக்கில் சென்று கொண்டு இருக்கிறார்.

Advertisement