நடிகையுடன் Sj சூர்யா போட்ட புகைப்படம், பிரேம்ஜி போட்ட கமெண்டுக்கு விழுந்து விழுந்து சிரித்த Sj சூர்யா.

0
239
premji
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவில் கூட எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்புவும் ஒருவர்.தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கல்யாணி பிரியதர்ஷன் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்தார். பின் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமானது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ ‘ படத்தின் மூலம் தான்.

- Advertisement -

கல்யாணி பிரியதர்ஷன் :

இதை தொடர்ந்து இவர் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, கருணாகரன், ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் என்று பலர் நடித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கல்யாணியுடன், எஸ் ஜே சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

கல்யாணியுடன் எஸ் ஜே சூர்யா :

அதில், ஹெலோ கல்யாணி, ட்வீட்டரில் இந்தப் படத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் நிறைய உழைத்து உங்களை ஃபிட் ஆக்கி, பாலிவுட் நட்சத்திரங்களுடன் பான் இந்தியன் படங்களுக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். மாநாடு படத்தின் லக்கி சாரம் நீங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு படு வைரலாக பரவ தற்போது பிரேம்ஜி இந்த புகைப்படத்திற்கு போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-184-1024x954.jpg

பிரேம்ஜி போட்ட கமன்ட் :

இந்த புகைப்படத்தை பார்த்த பிரேம்ஜி ‘மாநாடு’ படத்தில் எஸ் ஜே சூர்யா சொன்ன மிகவும் பிரபலமான வசனமான ‘தலைவரே ‘ வசனத்தை போட்டு கமன்ட் செய்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த எஸ் ஜே சூர்யாவும் சிரித்த படு ரிப்லை செய்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன்னை ஒரு முரட்டு சிங்கிள் என்று சொல்லிக்கொள்ளும் பிரேம்ஜி, நடிகைகளின் புகைடபங்களுக்கு தவறாமல் கமன்ட் செய்து விடுவார்.

This image has an empty alt attribute; its file name is 2-59-1024x824.jpg

பிரேம்ஜியும் கமெண்டுளும் :

சமீப காலமாக திரிஷா, குஷ்பூ, யாஷிகா, இந்துஜா, அஞ்சனா, அமிர்தா என்று பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஒரே மாதிரி கமன்ட் போட்டு இருந்தார். சமீபத்தில் கூட பிரேம்ஜி, பாடகி ஒருவரை காதலிக்கிறார் என்று கிசுகிசு எழுந்தது. ஆனால், தான் யாரையும் காதலிக்கவில்லை தான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று விளக்கம் கொடுத்தார் பிரேம்ஜி.

Advertisement