இந்த தொழில் விக்ரமிற்கு போட்டி ஆர்.கே சுரேஷ் அண்ட் கேங். இவர்களை எப்படி ஃபீட் செய்கிறார் விக்ரம் எனவும் கதை ஓடுகிறது. அந்த கேங்குடன் முட்டி மோதி சேட்டுக்கு வேலை செய்கிறார் விக்ரம்.
படத்தில் ஒரு பெரிய தாதாவாக வரும் குமாரின் காரையே தூக்குகிறார் விக்ரம், அங்கு ஆரம்பம் ஆகிறது படத்தின் கதை. இந்த பிரச்சனை எல்லாம் இப்பொடி ஓய்கிறது, இதற்கு யார் காரணம் என கண்டுபிப்பதே படத்தின் கதை. கதை முடியும் போது வைத்திருக்கும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் காட்சி அற்புதம்.
காதல், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் படத்தில் உள்ளது ஆனால், திரைக்கதை தான் இடிக்கிறது. பாடல்கள் எல்லாம் எதற்கு இந்த படத்திற்கு என்று தான் தோன்றுகிறது. பாடல் வந்துவிட்டது தம் அடிக்க கிளம்பிவிடுகிறார்கள் ரசிகர்கள்.
ஒரு முறை கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம் இது. ஆனால் மீண்டும் அரைக்கப்பட்ட ஒரு மசாலா படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.




