45 லட்ச ரூபாய் வீட்டை விற்று தற்போது சலம்டாக் மில்லினர் பட சிறுவன் குடும்பம் எங்கு வாழ்கிறார்கள் பாருங்க.

0
46446
Azharuddin-Ismai
- Advertisement -

2008 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் “ஸ்லம்டாக் மில்லியனர்”. இந்த படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவர்ந்தது. அதோடு இந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படம் வெறும் 15 கோடியில் உருவான படம் ஸ்லம்டாக் மில்லினர். இந்த படம் புதுமுக நடிகர், நடிகைகள் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும், இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி 377 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் அசாருதின் முகமது என்ற இஸ்லாமிய சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பாராட்டப்பட்டது. இந்த படத்திற்காக அசாருதின் முகமது பல விருதுகளைப் பெற்று உள்ளார்.

-விளம்பரம்-
அவர் விற்ற 45 லட்ச மதிப்புள்ள வீடு

அசாருதின் முகமது நிஜவாழ்க்கையில் பார்த்தால் சேரியில் பிறந்து வளர்ந்தவர் தான். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு மக்கள் மனதை கவர்ந்தது. அசாருதின் முகமது படத்தில் நடிப்பதற்கு முன்னால் சொந்த வீடு கிடையாது. சேரியில் பத்துக்கு பத்து என்ற ஒரு தகரக் கொட்டகையில் தான் இவர் வாழ்ந்து வந்தார். இவரை பற்றி தெரிந்த இயக்குனர் படம் வெளியான கையோடு இவருக்கு 45 லட்சம் மதிப்பில் ஒரு வீடு ஒன்று வாங்கி தந்தார். ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த சிறுவன் மீண்டும் பத்துக்கு பத்து என்ற தகர கொட்டகை வந்துவிட்டான். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஏன்னா, அசாருதின் முகமதுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : எங்களுக்கு இருக்கறது ஒரே ஒரு வீடு தான்.ஆனா அதுவும். நடிகர் பாக்கியராஜ் மகன் சொன்ன ஷாக்.

அதனால் அசாருதின் கிடைத்த வேலையை செய்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் கஷ்டங்கள் தாங்க முடியாமல் குடி மற்றும் போதைக்கு அடிமையானர். குடும்பத்தின் கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் தனக்கு பரிசாக கிடைத்த 45 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று கடனை அடைத்தார். பின் மீண்டும் சேரிக்கே வந்து சேர்ந்து விட்டார். அசாருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தும் இவருடைய போதைப்பழக்கம் இவர் எங்கு தன் வாழ்க்கையை ஆரம்பித்தாரோ அந்த இடத்திலேயே கொண்டு வந்து சேர்த்தது. போதை பழக்கத்தால் சொத்துக்களை இழந்து, மரியாதை இழந்து கடன் அதிகமாகி அனாதையாக இறந்த பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

-விளம்பரம்-
தற்போது அவர்கள் தங்கி இருக்கும் பத்துக்கு பத்து அறை

அந்த பட்டியலில் தேசிய விருது பெற்ற படத்தில் நடித்த அசாருதின் ஒருவராக மாறிவிட்டார். பல பேர் வாழ்க்கையிலும் இந்த போதை பழக்கம் தான் மிகப்பெரிய சாபமாக இருக்கிறது. போதைப்பழக்கம் முதலில் மகிழ்ச்சியை தந்தாலும் காலம் செல்லச் செல்ல நரகத்திற்கு கொண்டு போய் செல்லும். சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்கள் வாழ்க்கையையும் நாசமாக்கி உள்ளது. அதற்கு உதாரணமாக இன்று ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் சிறுவன் இருக்கிறான்.

Advertisement