திருமணம் செய்யாமல் ஜமீன் போல வாழ்ந்த நடிகை SN லட்சுமி, அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது.

0
1610
snlakshmi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் பெறாத பல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் எஸ்.என்.லட்சுமி. தென்னிந்திய தமிழ் சினிமாவில் 60 காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை எஸ்.என்.லட்சுமி. இவரைப் பற்றி அறியாத பல விஷயங்களை தான் இங்கு பார்க்க போகிறோம். பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி அவர்கள் நாராயண தேவர்- பழனி அம்மாள் தம்பதியின் 13வது குழந்தை. இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் லால்குடி அருகிலுள்ள பொட்டல் பட்டி கிராமம்.

-விளம்பரம்-

இது பெயருக்கேற்ப வறுமையை கொண்ட ஊர் தான். தந்தை இறந்ததும் தாய் பழனியம்மாள் பிழைப்புக்காக விருதுநகர் சென்று கூலி வேலை செய்தும், பணிவிடை செய்தும் பிள்ளைகளை காப்பாற்றி இருந்தார். எஸ்.என்.லட்சுமியின் சகோதரர்கள் கல்லுடைக்கும் வேலைக்கு செல்வார்கள். கடைசியாக பிறந்த எஸ்.என்.லட்சுமி வறுமை கொடுமை காரணமாகவும், கவனிக்க யாரும் இல்லாத கொடுமையாலும் தன்னுடைய பதினொரு வயதில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

- Advertisement -

எஸ்.என்.லட்சுமி பற்றிய தகவல்:

பின் அவருக்கு தெரிந்த நடன கலைஞர் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறார். மெட்ராஸ் சென்று சினிமாவில் சேர விரும்பினார் எஸ்.என்.லட்சுமி. ஆரம்பத்தில் இவர் நாடக கம்பெனிகளில் நடிக்க தொடங்கினார். எஸ்.என்.லட்சுமி 200க்கும் அதிகமான நாடகங்களில் நடித்தார், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மேடைகளில் ஏறி இருக்கிறார். பின் இவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு செல்கிறார். மேலும், 1948ல் ஜெமினியின் சந்திரலேகா திரைப்படத்தில் இவருக்கு நடனம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

எஸ்.என்.லட்சுமி திரைப்பயணம்:

ஆனால், அதற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமே அமையவில்லை. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தாமரை குளம் திரைப்படமே எஸ்.என்.லட்சுமியை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார் எஸ்.என்.லட்சுமி. மேலும், இவர் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் என அந்தக்கால சூப்பர் ஸ்டார்களின் படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து இருக்கிறார். அதற்குப் பின் கமல், ரஜினி,சத்யராஜ்,பிரபு,கார்த்தி,விஜய்,அஜித் போன்ற பல நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

எஸ்.என்.லட்சுமி குடும்பம்:

அதுமட்டும் இல்லாமல் எஸ்.என்.லட்சுமி கதாபாத்திரத்தை தாண்டி நடிப்பை வெளிப்படுத்துவதில்லை. கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் அவருடைய இயல்பு. இப்படி படங்களில் நடித்து சினிமாவில் புகழ்வாய்ந்த நடிகையாக இருந்தாலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை குடும்ப பந்தத்தில் இணையாமல் இருந்தார். அண்ணன்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உடனே வசித்து வந்தார். நடிப்பு அவருடன் ஊறிப்போன ஒன்று.

எஸ்.என்.லட்சுமி இறப்பு:

கடைசி வரை அதனை அவர் விடவில்லை. சினிமாவில் வாய்ப்பு குறைந்து போதும் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களில் எஸ்.என்.லட்சுமி நடித்து இருந்தார். பின் இவர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி மாரடைப்பால் காலமாகி இருந்தார். இப்படி பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்த நடிகை எஸ்.என்.லட்சுமிக்கு சினிமாவில் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று. அதுமட்டுமில்லாமல் இவருடைய சொத்துக்களும் என்னவானது என்பது கேள்விக்குறியாகவே? இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரின் ஊர் மக்கள் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisement