தந்தை வயது ரசிகரை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறிய பிரசன்னா – சினேகா ஜோடி.

0
620
- Advertisement -

தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். தற்போது இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார்.

- Advertisement -

காதல் To கல்யாணம் :

மேலும், சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். இந்த படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின் 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் என்ற அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள்.

வாசகர் ஜெகன் சத்யராஜ் :

இப்படி கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக இருவரும் கடந்த சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆனந்த விகடன் வாசகர் ஜெகன் சத்யராஜ் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது சினேகா- பிரசன்னாவை சந்தித்து புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. இதை அறிந்த சினேகா- பிரசன்னா அவரை நேரில் சந்திக்க வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறியும், அவர் கேட்ட கேள்விகளுக்கும் சுவாரசியமாக பதில் அளித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

குடும்பம் குறித்து சொன்னது:

அதில், எங்கள் இரண்டு பேரின் முதல் படத்தின் இயக்குனர் சுசிதான். எங்களுடைய கல்யாண அழைப்பிதழை இயக்குனர் சுசி சாரிடம் கொடுத்த போதும் அவருக்கும் ஆச்சரியம். எல்லாமே காரண காரியத்தோடு தான் நடக்கும் என்று சொல்வார்கள். அதற்கு நாங்கள் தான் உதாரணம். எங்கள் இரண்டு பேரோட எதிர்பார்ப்பே அன்பு காண்பிக்க வேண்டும் என்பதுதான். இன்று வரைக்கும் அவரிடம் நான் எந்த எதிர்பார்ப்பையும் வைத்தது கிடையாது. அவரிடம் நான் சண்டை போடுகிற ஒரே விஷயம் வீட்டிற்கு நேரத்தோடு வந்து எங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள் என்று தான்.

வைரலாகும் வீடியோ:

இதை வாங்கிக் கொடு அதை வாங்கி கொடு என்று நான் அவரிடம் சண்டை போட்டது கிடையாது. குடும்ப பாசம் என்பது அப்பதான் குழந்தைகளுக்கும் புரியும். அதேபோல் குழந்தைகள் விஷயத்தில் நான் எப்பவுமே ஜாலியாக இருப்பேன். அவர் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார். இரண்டு பேருமே செல்லம் கொடுத்தால் சரியாக வராது. இப்படி வாசகர் ஜெகன் சத்யராஜ் கேட்ட கேள்விக்கு சினேகா பிரசன்னா சினேகா புன்னகையுடன் கூறியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement