தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் – கவிஞர் சிநேகன்

0
3955
Snehan
- Advertisement -

நேற்றைய பிக் பாஸ் போட்டியில் போட்டியாளர்களை வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்ற ஒரு போட்டி நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

நடந்த போட்டியில் ஓவ்வொருவரிடமும் 5 கேள்விகள் கேட்கப்படும், அதிக கேளிவிகளுக்கு விடை அளிப்பவர் இந்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

snehan-tamilthai-vaalthuஇதில் பங்கு பெற்ற சினேகனிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கடுமையாக யோசித்த பிறகு “தாயுமானவர்” என்று பதில் அளித்தார்.

இதையும் அவராக சொல்லவில்லை, வேறொரு டாஸ்கில் தமிழ் தாய் வாழ்த்து, எழுதியவர் தாயுமானவர் என்று ஜூலி கூறினார்.

-விளம்பரம்-

julie-tamilஅதோடு இல்லாமல், போட்டி நிறைவு பெற்றபிறகு, வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது கேள்வி பதில்களை விவாதம் செய்யும் பொழுது “தாயுமானவர்” என்ற பதிலை சினேகன் மிக பெருமையாக சொல்ல, அருகில் இருந்த சக்தியோ இதையெல்லாம் நீங்கள் எளிதாக சொல்லி இருப்பீர்கள் என மார்தட்டி கொண்டார்.

ஆக மொத்தத்தில் வீட்டில் உள்ள எவருக்குமே தமிழ்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்பதற்கான பதில் தெரியவில்லை. அதோடு எழுதியவர் “தாயுமானவர்” என்று தீர்க்கமாக நம்புகிறார்கள்.

இன்று இதை பற்றி கமல் நிச்சயம் கேள்வி எழுப்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் காயத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பவராவார்

Advertisement