இப்படி சொல்லித்தான் அந்த காமெடியில் சாலமன் பாப்பையாவ நடிக்க வச்சாங்க, ஆன படம் வந்த பின் – ராஜா சொன்ன விளக்கம்.

0
727
raja
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் காமெடியில் பின்னி பெடலெடுத்து இருப்பார் விவேக். அதிலும் குறிப்பாக அங்கவை சங்கவை காமெடி காட்சிகள் அப்போது பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

இந்த படம் வெளியான போது இந்த காமெடி மிகவும் பிரபலமானாலும் சமீபத்தில் எந்த காட்சி சமூக வலைதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிஜத்தில் வெள்ளையாக இருக்கும் பெண்களை காமெடி என்ற பெயரில் கருப்பாக மாற்றி அவர்களை வைத்து காமெடி செய்து இருப்பது உருவக் கேலி செய்வது போல தான் என்றும் ஷங்கர் எப்படி இப்படி ஒரு காட்சியை வைத்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.

- Advertisement -

சாலமன் பாப்பையா போன்ற நபர் எப்படி எப்படி உருவக் கேலி காமெடியில் நடித்தார் என்ற கேள்வியும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து படத்தில் அடித்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கூறுகையில், சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை நடிக்க அழைத்த போது அவர்கள் கூறிய கதை வேறு ” அதாவது முதலில் கூறிய கதையில் கருப்பு நிறத்தில் இருக்கும் இரண்டு பிள்ளைகள் அவர்களுக்கு மாப்பிளை கிடைக்காமல் அவதிப்படும் தகப்பன்.

அதே போல கருப்பாக இருக்கும் கதாநாயகன் அவருக்கு சிகப்பாக இருக்கும் கதாநாயகி. இப்படி இருக்கையில் படத்தின் முடிவில் கருப்பாக இருக்கும் கதாநாயகனுக்கு சிகாப்பாக இருக்கும் மனைவி கிடைப்பார். அதே போல கருப்பாக இருக்கும் அந்த பெண்களுக்கு சிகப்பாக இருக்கும் மணமகன்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் நிறம் என்பது மோசமானது அல்ல என்ற கருத்துள்ள கதை என சொல்லித்தால் சாலமன் பாப்பையாவை நடிப்பதற்கு அழைத்தார்கள்.

-விளம்பரம்-

அங்கவை, சங்கவை சர்ச்சை :

ஆனால் படமோ 3 மணிநேரம் எனவே இவர்களுக்கான அந்த கதையை விட்டுவிட்டு படம் வேறு வழியில் சென்று விட்டது. அதோ போல அங்கவை, சங்கவை என்ற பெயர்களை அவமானப்படுத்திவிட்டனர் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால் எந்த இலக்கியத்திலும் அங்கவை, சங்கவை என்ற பெயர் பாரி மகளீருக்கு இருந்ததாக இலக்கிய சான்று இல்லை, பின்னாலில் வந்த கதைகளில்தான் இருக்கிறது. அதே போல படத்தில் சாலமன் பாப்பையாவின் பெயர் தொண்டை மானே தவிர பாரி கிடையாது. பொதுவாக பல நபர்களின் பெயர் ராஜா என இருக்கிறது அதற்காக ராஜா என ஏன் பெயர் வைதீர்கள் என்று கேட்ட முடியுமா.

அப்போது பாராட்டாதவர்கள் இப்போது :

படம் வெளியான பிறகு மிகவும் கேவலமாக திட்டினார்கள். சாலமன் பாப்பையா தொடர்ந்து 13 வருடங்கள் திருக்குறள், சங்க இலக்கியம் என பலவற்றை மேடையில் பேசி இருக்கிறார். அதற்க்கெல்லாம் பாராட்ட மனமில்லாத நம் மக்கள் டிவியில் அங்கவை, சங்கவை என்று வந்தவுடன் திட்டுகின்றனர். கதை தொடங்கிய போது முதலில் சொன்னது போன்று தான் இருந்தது. அதனால் தான் அவர் நடித்தார். ஆனால் கதை மாறியவுடன் நாங்கள் என்ன செய்யமுடியும்.

சாலமன் பாப்பையா நடிக்காததற்கு காரணம் :

நீங்கள் என்னிடம் பேட்டி எடுக்கும் போது ஒரு கேள்வி கேட்டல் நான் பத்தியில் எழுந்து செல்லமுடியாது. அது போலதான் அப்போது ஏவிஎம் தயாரிக்கும் படம், சங்கர் இயக்குகிறார், ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார், அதோடு ரஜினி நடிக்கிறார் என்று தான் தோன்றியதே தவிர இவற்றை சரி செய்தால் தான் என்னால் படத்தில் நடிக்கமுடியும் என்று அப்போது சொல்ல முடியவில்லை. அந்த அனுபவத்தினால் தான் பின்னாளில் நான் அந்த மாதிரியான கதை வந்தால் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோல சாலமன் பாப்பையா வீட்டிலும் இந்த சம்பவத்திற்கு பிறகு கடுமையாக எதிர்த்தார்கள். எனவே, தான் அவர் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Advertisement