தேங்கி நின்ற மழை நீர், கடந்த ஆட்சியை குறை சொல்லி முதல்வரை டேக் செய்த சேரன் – வைரலாகும் பதிவு.

0
727
cheran
- Advertisement -

வருடம் வருடம் சென்னையில் பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும். இதனால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்து பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை கொஞ்சம் கூட பிரேக் எடுக்காமல் பெய்தது பெய்த படியே உள்ளது. இதனால் சென்னையில் பெரும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளிலும் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து இருப்பதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன.

-விளம்பரம்-

இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் பல இடங்களில் மக்கள் பாதிக்கப்படும், தங்களுடைய அன்றாட தேவைகளை இழந்தும் தத்தளித்து வருகிறார்கள். இது தான் வருடம் வருடம் மழை காலங்களில் சென்னையின் நிலைமை. தற்போது சென்னைக்கு ரெட் அலார்ட் வானிலை மையம் கொடுத்துள்ளது. பல பகுதிகளில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்து இருப்பதால் மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நகரின் பல முக்கிய சாலைகளில் அதிக அளவுக்கு மழை நீர் தேங்கி இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து ஏன் வெளியேறினீங்க, தாமரையோட என்ன பிரச்சனை ? – ரசிகர்ளின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த நமீதா.

- Advertisement -

அதோடு பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்தால் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும் என மின் துறை அறிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் உணவுக்காகவும், தங்க இடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். சென்னையின் கன மழையால் பல இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் துரிதமாக செயல்பட்டு களத்தில் இறங்கி இருக்கிறார். பல இடங்களில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் இந்த அளவிற்கு பெரும் மழையை சென்னை சந்தித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் அவர்கள் தற்போது சென்னை மழை குறித்து டீவ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் முந்தைய ஆட்சியில் வாங்கியிருந்தார்கள். இதுதான் அந்த திட்டம் செயல்படுத்திய நகரமா? இந்த பைலை முதலில் எடுங்கள் ஐயா என்று அவர் முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ட்விட் போட்டிருந்தார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த நிலைமை மாறி கூடிய விரைவில் எல்லாம் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement