கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது திடீர் சாமியார் அண்ணபூரணி அரசு சாமியார் தான். பொதுவாக தமிழ்நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக பெண் சாமியார் ஒருவர் புது அவதாரம் எடுத்துள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி.
திடீர் சாமியார் :
அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும் பூஜை செய்யும் வீடியோக்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அந்த வீடியோக்களும் இதனுடன் இணைத்து வெளியிட்டு உள்ளார்கள்.
சொல்வதெல்லாம் உண்மை To சாமியார் :
அதில் அன்னபூரணி திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னபூரணி மீது புகார் எழுந்தது. ஆனால், தற்போது அன்னபூரணி திடீர் சாமியாராகி உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன் ஒரே சிரிப்பா இருக்கு என்று கூறி இருந்தார்.
அன்னபூரணி நிகழ்ச்சி கேன்சல் :
அதே போல அண்ணப்புறணி வரும் 1 ஆம் தேதி ஒரு பக்தி கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என்று போலீசார் மறுக்க அந்த நிகழ்ச்சி தற்போது கேன்சல் ஆகிவிட்டது. கடந்த சில தினங்களாகவே அன்னப்பூரணியை சமூக வலைதளத்தில் பலரும் வச்சி செய்து வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் முதன்முறையாக பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறது.
அண்ணபூரணியின் பேட்டி :
அதில் பேசியுள்ள இவர் , தான் ஒரு சக்தி எனவும் இந்த உலகை இயக்கும் போதும் எனக்குள் இருக்கும் சக்தி தான் என்றும் கூறியிருக்கிறார். மேலும், பேசிக் கொண்டே இருக்கும்போது திடீரென்று கத்திய இவர் என்னுடைய கோபத்தை சாதாரணமாக பார்க்கிறீர்களா என்று ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். மேலும், தனக்குள் இருக்கும் என் சக்தியை என் குழந்தைகள் நம்புகிறார்கள், அதை நீங்கலும் உணர்ந்தாள் தான் புரியும் என்றும் கூறியுள்ளார்.
யார் அந்த அரசு :
அதே போல அண்ணபூரணி அரசு என்ற இவரது பெயரில் ‘அரசு’ என்று குறிப்பிடபட்டுள்ளது வேறு யாரும் இல்லை. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இவருக்காக கட்டின மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும்விட்டு வந்த அந்த அரசு தான். மேலும், இவர் என்ன ஆனார் என்று கேட்டதற்கு அவரை இயற்கை எடுத்துக்கொண்டு அவரின் சக்தி எனக்குள் இருக்கிறது என்று சொல்லியுள்ளார். அப்படி என்றால் என்ன என்று கேட்டதற்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார் அண்ணபூரணி.