ஆர் ஜேவிற்க்கு கீழே இருந்து சைகை செய்து டிப்ஸ் கொடுத்த Skவின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள் – அப்படி என்ன செய்தார். வைரல் வீடியோ.

0
597
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது.

-விளம்பரம்-

வசூல் வேட்டை நடத்திய டாக்டர் :

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருப்பது படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது அயலான், டான் போன்று பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

RRR Pre Release Function :

இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயன் செயல் குறித்து ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அப்படி என்ன அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார் என்று பார்த்தால், சென்னையில் நடைபெற்ற ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

மறந்த Vj நினைவுபடுத்திய Sk :

அந்த விழாவில் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்கள். அதற்கு தொகுப்பாளர்கள் வாழ்த்துக்கூறி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே சிவகார்த்திகேயன் ட்ரம்ஸ் வாசித்தவரையும் பற்றி பேசுங்கள் என்று சைகை செய்து இருக்கிறார். இதை பார்த்த தொகுப்பாளர் ஆர் ஜே விஜய் பாராட்டினார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து என்ன மனுஷன்! இவர் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர் என்று பாராட்டித் தள்ளுகிறார்கள்.

-விளம்பரம்-

Sk குறித்து பேசிய ராஜமௌலி :

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மேடையில் பேசியது, நான் ராஜமௌலி சாருடைய மிகப்பெரிய ரசிகன். ‘நான் ஈ’ படம் வந்த பிறகுதான் நான் சினிமாவுக்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா! என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய படங்களையும் சாதனைகளும் செய்துவிட்டு அவர் சிம்பிளாக அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உங்களை பார்க்க வேண்டும் என்று நான் ஆவலாக இருந்தேன். இன்று பார்த்துவிட்டேன் என்று பேசியிருந்தார்.

ஜனவரி 7ஆம் தேதி வரும் RRR :

பாகுபலி பிரம்மாண்டத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது RRR என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், ஜனவரி 7ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Advertisement