நான் ஒன்னும் அடுத்த ஷகிலா இல்ல. விமர்சனங்களுக்கு சோனா கொடுத்த பதிலடி.

0
4544
Sona
- Advertisement -

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சோனாவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பின்னர் ஷாஜகான் வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிபிடத்தக்கது.

-விளம்பரம்-
sona

- Advertisement -

பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சோனா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் , “சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன் பணத்தை விட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன்.மேலும் எனக்கு பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமும் இல்லை. முன்பு போல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். வரவிருக்கும் 2020-ம் ஆண்டு எனக்கு சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன்.

இதையும் பாருங்க : பிரபாஸிற்கு அம்மாவாக இந்த நடிகையா. என்ன இவ்வளோ இளமையை இருக்காங்க இவங்கள போய்.

இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்” . இந்த நிலையில் சோனா நடித்துள்ள பச்ச மாங்கா படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்த்து. அதில் சோனா படு கவர்ச்சியாக நடித்திருந்ததை பார்த்து பலரும் சோனா அடுத்த ஷகிலா என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் பச்ச மாங்கா படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து விளக்கமளித்துள்ளார் சோனா. அதில்,

-விளம்பரம்-

பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் தான் அது அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்திஉள்ளார்கள். அது உண்மை இல்லை. கேரளாவில்   பெண்கள்   எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்  தான் படத்தில் நான் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்

Advertisement