பிரபாஸிற்கு அம்மாவாக இந்த நடிகையா. என்ன இவ்வளோ இளமையை இருக்காங்க இவங்கள போய்.

0
6411
- Advertisement -

டோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் தான் பிரபாஸ் அவர்கள் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் பிரபாஸ் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட், ரிபெல் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி படம் பற்றிப் பேசாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் இன் சம்பளமும் உயர்ந்தது. மேலும், உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் நடிகர் பிரபாஸ்.

-விளம்பரம்-
Image result for bhagyashree in prabhas movie

- Advertisement -

அதோடு உலக அளவில் பாகுபலி படத்தின் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் மன்னனாகத் திகழ்ந்தார் பிரபாஸ். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் பிரபாஸ் திரைப்பயணம் மாறியது என்று கூட சொல்லலாம். பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகளாவிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகர் பிரபாஸ். அதற்கு பிறகு இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் அவர்கள் சாஹோ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும், அதிக அளவில் வசூல் சாதனையும் பெற்றது.

தற்போது இவர் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபாஸுக்கு அம்மாவாக பிரபல பாலிவுட் நடிகை பாக்ய ஸ்ரீ நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பாக்யஸ்ரீ அவர்கள் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை பாக்ய ஸ்ரீ அவர்களுக்கு 50 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவர் இளமை ததும்பும் முகம் பாவம் கொண்டவராக இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது நடிகை பாக்ய ஸ்ரீ அவர்கள் 37 வயது கொண்ட பிரபாஸ் அவர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை கேட்டு ரசிகர்கள் எல்லோருமே ஆச்சர்யத்தில் உள்ளார்கள். இந்த படம் கோடை விடுமுறையில் திரையரங்களில் வெளியிட உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். அதிக பட்ஜெட்டில் இந்த படம் உருவாகப் போகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்த படம் தயாராக உள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பில் உள்ளார்கள்.

Advertisement