பாடிகார்ட்சுடன் பைக் ஒட்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ரஜினி பட நடிகை. வைரலாகும் வீடியோ.

0
5851
sonakshi-sinha
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சோனாக்ஷி சின்கா. நடிகர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி . இவர் முதலில் ஆடை வடிவமைப்பாளராக தான் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தபாங் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானர். தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் முதலும் கடைசியுமாக நடித்த படம் இது தான். இவர் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த தேவதையாக இருந்தாலும் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் இவர் பாலிவுட்டில் தான் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். அதுமட்டும் இல்லாமல் இவரை சமூக வலைத்தளங்களின் சர்ச்சை நாயகி என்று சொல்லலாம். சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு பிரச்சினையில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார். அந்த வகையில் நடிகை சோனாக்ஷி அவர்கள் தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தனது பாடி கார்ட்ஸ்சுடன் பைக் ஓட்டி பொது மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இதையும் பாருங்க : 45 லட்ச ரூபாய் வீட்டை விற்று தற்போது சலம்டாக் மில்லினர் பட சிறுவன் குடும்பம் எங்கு வாழ்கிறார்கள் பாருங்க.

- Advertisement -

நடிகை சோனாக்ஷி சின்கா அவர்கள் பைக் ஓட்டி பழகுவதற்காக கூட்டம் நெரிசல் மிகுந்த சாலையில் பைக் ஓட்டி உள்ளார். இவர் பைக் ஓட்டுவது பிரச்சனையில்லை. ஆனால், இவரது பாதுகாப்பிற்காக அவரது பாடி கார்டுகள் அவரைச் சுற்றி ஓடி வந்து டிராபிக் ஏற்படுத்தி உள்ளார்கள். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மக்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியது, உங்களுக்கு பைக் ஓட்ட வேண்டும் என்று ஆசையாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் ஓட்டுங்கள். இப்படி அதிகமாக நெரிசல் மிகுந்த சாலையில் பைக் ஓட்டி டிராபிக் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் என்று ரசிகர்கள் தாறுமாறாக நடிகை சோனாக்ஷியை திட்டி வருகிறார்கள். தற்போது இவர் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து நடிகர் பிரபு தேவா அவர்கள் “தபாங் 3” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகை சோனாக்சி அவர்கள் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், இயக்கி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டய கிளப்பி உள்ளது. அதோடு தபாங் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களிடம் படத்தின் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement