‘எந்த மருத்துவமனை’ – சிவசங்கருக்கு உதவ முன் வந்த சோனு சூட். வைரலாகும் வாட்ஸ் அப் சேட்டின் புகைப்படம்.

0
677
Sonu
- Advertisement -

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சிவசங்கர் மாஸ்டருக்கு சோனு சூட் உதவி செய்ய முன் வந்துள்ளார். இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஆனால், சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் இவரின் உடல்நிலை மோசமாகி தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவரின் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

இதையும் பாருங்க : மல்லு ஆண்டிய மிஞ்சிடீங்க’ – வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கிரண் வெளியிட்ட புகைப்படம். புலம்பும் ரசிகர்கள்.

- Advertisement -

இந்நிலையில் என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள் என்று சிவசங்கர் மாஸ்டர் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு பிரபல நடிகர் சோனு சூட் உதவ முன் வந்துள்ளார்.

-விளம்பரம்-

சிவசங்கர் நிலைமையை அறிந்த சோனு சூட், வாட்ஸ் அப் அப்பில் சிவசங்கர் மாஸ்டரின் நிலை குறித்து அறிந்துகொண்டு, விரைவில் தன்னுடைய குழு தேவையானவற்றை செய்யும் என்று கூறி இருந்தா. அந்த வாட்ஸ் அப் உரையாடல் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து பதிவிட்டுள்ள சோனு சூட் ‘நான் ஏற்கெனவே அவர்கள் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது உயிரை காக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

Advertisement