சூரரை போற்று படத்தில் அப்துல் கலாம் குரலில் பேசியது யார் தெரியுமா ?

0
1948
- Advertisement -

பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.

- Advertisement -

இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டபட்டு வருகிறது. அதே போல இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாமை, சூர்யாவை சந்திப்பது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். இந்த காட்சி படத்தின் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்து இருக்கும்.

இந்த காட்சியில் அப்துல் காலம் போன்றே ஒரு நபர் நடித்து இருப்பார். அதே போல இந்த காட்சியில் அப்துல் கலாம் குரலை கேட்ட போது கண்டிப்பாக ஒரு நொடி வியந்து போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உண்மையில் இந்த காட்சியல் அப்துல் கலாம் குரலில் பின்னணி குரல் கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நவீன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement