அட, புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா ? தெரிஞ்சா ஷாக்காடுவீங்க.

0
310285
sudha
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவு தான். அந்த வகையில் பெண் இயக்குனர் பிரியா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பிரபலமும் தமிழ் சினிமாவில் தலை காண்பித்தது இந்த படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-

ஆம், இந்த படத்தில் ஒரு இயக்குனரும் நடித்துள்ளார்.அட, வேறு யாரும் இல்லைங்க நம்ம இறுதி சுற்று சுதா தான். தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுதா கொங்காரா. அதன் பின்னர் இவர் மாதவன் மற்றும் ரித்திகா சிங்கை வைத்து எடுத்த ‘இறுதி சற்று’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

- Advertisement -

தற்போது சூர்யாவை வைத்து ‘சூரரை போற்று’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சுதா. இவர்களுடன் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

sudha

இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான கதை. ஆனால், இது முழுக்க முழுக்க வரலாற்றுப் படமாக இருக்காமல் சில சினிமா விஷயங்களையும் பொருத்தி உள்ளார் இயக்குனர். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவர்களும் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement