விவாகரத்து செஞ்சிட்ட அப்புறம் நான் செத்துடுவேன்னு நெனச்சேன் – முதன் முறையாக மனம் திறந்த சமந்தா.

0
921
samantha
- Advertisement -

நாகசைத்தின்யாவை பிரிந்த பின்னர் விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் சமந்தா. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

- Advertisement -

இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார். அதே போல விவகாரத்துக்கு கொஞ்சம் மாதங்கள் முன்பு தான் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார் சமந்தா. ஆனால், விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is samantha13112021m.jpg

தமிழில் மட்டுமல்லாது ஹாலிவுட் இயக்குனர் இயக்கும் ஒரு படத்திலும் கூட சமந்தா கமிட் ஆகி இருக்கிறார். அதே போல தன் திரை வாழ்க்கையில் முதன் முறையாக அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின்ப மூலம் ஐட்டம் பாடலிலும் நடனமாட இருக்கிறார் சமந்தா. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தா முதன் முறையாக விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் பேசிய அவர், ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். விவாகரத்து பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாதுஎன்று கூறியுள்ளார்.

Advertisement