சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள் இந்தியில் ரீ – மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான சூரரை போற்று திரைப்படம் தற்போது இந்தியில் ரீ – மேக் செய்யப்படுகிறது. இறுதிச்சுற்று புகழ் சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளிநடித்து இருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப், ஊர்வசி உட்பட பலர் நடித்து இருந்தனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவுசெய்து இருந்தார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைதயாரித்து இருந்தனர். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் அமேசான் பிரேமில் வெளியாகி இருந்தது.ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருந்தனர்.
ஆனால், இந்த படத்தின் ஏர் டெக்கான் உரிமையாளரான கோபிநாத்தை ஒரு தமிழராக தான் காட்டியிருப்பார்கள். உண்மையில் கோபிநாத் பிறந்தது கர்நாடக மாநிலம் மைசூரில் தான்.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய இருக்கின்றனர். நடிகர் சூர்யா அவர்களின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் சூர்யா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் காஞ்சனா 2 படத்தின் ரீ – மேக்கில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில்நடித்து இருந்தார். இந்த படம் தமிழ் ரசிகர்களால் மிகுந்த கேலிக்கு உள்ளாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.