பார்த்திபன் சொன்னது போல 3.5 கோடி கட்டி சூரரை போற்றுவை ஆஸ்கருக்கு அனுப்பினாரா சூர்யா ?

0
1871
sorarai
- Advertisement -

சூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமமாக ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து சூரரை போற்று திரைப்படமும் பொதுப்பிரிவில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் சூரரை போற்று போட்டியிட இருக்கிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி இறுதிப்போட்டியில் இடம்பெற வேண்டும். அதிலிருந்து தேர்வாகி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.

ஆஸ்கர் விருதுகளில் ஒருபடம் தகுதி பெறுவதற்கு, அமெரிக்காவில் இருக்கும் திரையரங்குகளில் அப்படம் குறைந்தகாலம் ஓடியிருத்தல் அவசியம். ‘ஒத்த செருப்பு’ படம் ஆஸ்கரில் இணைவதற்காக அமெரிக்கா சென்று அப்படத்தைத் திரையிட்டார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். ஒரு பட நிறுவனம் 12,500 (அதாவது இந்திய மதிப்பில் 9,12,901 ரூபாய் ) அமெரிக்க டாலர் தொகையை கட்டி, தங்களின் படத்தினை ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பலாம். அதை ‘Quality Control’ குழு ஒன்று தரம் பார்க்கும். தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அந்தப் படம் ஆஸ்கர் ஸ்கிரீனிங் பட்டியலில் இடம்பெறும்.

-விளம்பரம்-

அமெரிக்காவில் திரையிடப்பட்ட படம் என்றால் இந்த 12,500 அமெரிக்க டாலர் தேவையில்லை. ஆனால், ஒத்த செருப்பு படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என்று பார்த்திபனிடம் ரசிகர் கேட்ட போது, உள்ளூரிலேயே இவ்வளவு அது வெளிநாட ஆயிரம் இருக்கும், அதற்கு செலவு செய்யவும் என்னால் இயலவில்லை பாப்போம் என்று கூறியுள்ளார் பார்த்திபன். இந்த டீவீட்டை கண்ட ரசிகர் ஒருவர் ஆஸ்காருக்கு செலவு செய்யணுமா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பார்த்திபன், விசாரிச்சு பாருங்க விசாரனைக்கே 3 1/2 கோடி செலவு செஞ்சாங்க. அப்படி பிரச்சாரம் பண்ணாதான் நாமினேஷனாவது கிடைக்கும் என்றும் கூறி இருந்தார் பார்த்திபன்.

Advertisement