மீனா வீட்டை இத்தனை கோடி கோடிக்கு வாங்கினேனா. நடிகர் சூரி விளக்கம்.

0
13587
meena soori
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீனாவின் வீட்டை காமெடி நடிகர் சூரி வாங்கி உள்ளார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது. தமிழ் சினிமா உலகில் 1982 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சங்கள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for meena"

- Advertisement -

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ‘ரஜினி uncle’ என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது ‘ரஜினி uncle’ என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மீனா தான். அந்த அளவிற்கு அவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆவதற்கு முன்பே இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும்,ரஜினி uncle என்று சொல்லி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அவர்கள் ரஜினிகாந்துக்கு ஜோடியாக முத்து, எஜமான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இதனால் தான் ஆயுத எழுத்து சீரியலில் இந்து விலகினாராம் அம்ஜத்.

இதை தொடர்ந்து இவர் கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், சரத்குமார் என்று அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். நடிகை மீன் சென்னையில் முதல் முறையாக வீடு ஒன்று கட்டியிருந்தார். மேலும், இந்த வீட்டை நடிகர் சூரிக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. சென்னை சாலிகிராமம் அருகே இருக்கும் மீனாவின் வீட்டை நடிகர் சூரி சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-
Image result for soori interview"

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமானார் நடிகர் சூரி. மேலும், அடுத்தடுத்து பல படங்களில் சூரி பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பு தவிர தற்போது ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது. அந்தவகையில் அய்யன் மற்றும் அம்மன் என்ற சைவ மற்றும் அசைவ ஹோட்டல்களை மதுரையில் சமீபத்தில் தான் ஆரம்பித்தார். இந்த நிலையில் நடிகர் சூரி அவர்கள் மீனாவின் வீட்டை 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து வந்த தகவல் பொய் என்று நடிகர் சூரி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சூரி, மீனாவின் வீட்டை நான் 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி. மேலும் அது போல் நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று சூரி கூறியுள்ளார்.

Advertisement