தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.

இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். முதல் படமே இவருக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது. இதை அடுத்து இவர் கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. கடைசியாக சூரி நடித்த மாமன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மண்டாடி. மீனவர்களுடைய படகு ரேசை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.
சூரி குறித்த தகவல்:
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூரி பேசி இருக்கும் விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மதுரையில் தி கனெக்ட் அமைப்பின் சார்பில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வேலை தேடும் இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சூரி கலந்து கொண்டிருந்தார். அந்த விழாவில் பேசிய சூரி, என்னுடைய பெயர் ராம். என்னுடைய தம்பியின் பெயர் லட்சுமணன். நாங்கள் மதுரையில் உள்ள செனாய் பள்ளியில் தான் படித்தோம்.

சூரி பேட்டி
நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. நாங்கள் நன்றாக படித்திருந்தால் ஒரு மாவட்ட ஆட்சியராகவும், என்னுடைய தம்பி பொறியாளராகவும் வரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எங்களால் முடியவில்லை. கஷ்டம் ஏற்பட்டதால் நான் எட்டாம் வகுப்புடன் என்னுடைய படிப்பை நிறுத்திக் கொண்டேன். ஒரு கடையில் வேலை பார்த்தேன். அப்படியே என்னுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த நிலையில் தான் திடீரென்று சினிமாவிற்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது.

வாழ்க்கை அனுபவம்:
நான் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன் பெரிய அவமானங்கள், போராட்டங்கள் சந்தித்து இருக்கிறேன்.
சினிமாவிற்காக நான் சென்னை வந்தபோது என்னிடம் ஒரு 20 ரூபாய் கூட சாப்பிட இருக்காது. அதற்கு நான் ரொம்பவே கஷ்டப் பட்டேன். நான் அடிபட்டு வந்ததால் தான் எனக்கு இவ்வளவு தெளிவு இருக்கிறது. ஆசைப்பட்டு வந்தவர்களிடம் இந்த தெளிவு இருக்காது. தற்போது மதுரையில் அம்மன் எனும் ஓட்டலில்
குறைந்த அளவில் உணவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய கனவு. அதை நான் இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். அந்த ஓட்டலில் பலரும் வந்து சாப்பிட்டு ரொம்ப நன்றாக இருக்கிறது என்று என்னை பாராட்டி விட்டு செல்கிறார்கள். அது எனக்கு நிம்மதியை கொடுக்கிறது என்று கூறுகிறார்.






