புனிதமான கல்வியை வியாபாரம் ஆக்குவது நல்லதில்லை – தன் பெயரை பயன்படுத்தி பொய்யான விளம்பரம். நேரில் அழைத்து எச்சரித்துள்ள சூரி.

0
304
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடியன்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்வளவு ஏன் வைகைபுயல் வடிவேலு கூட ஆரம்பத்தில் கௌண்டமணியின் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-

அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார். தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.

இதையும் பாருங்க : மகனின் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று தற்போது அங்கேயே விவசாயியாக மாறி இருக்கும் நெப்போலியன் – அவரே வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

சூரி – வெற்றிமாறன் படம் :

இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான Don படத்தில் நடித்திருந்தார் சூரி. ஆனால், அந்த படத்திலும் சூரியின் காமெடி அவ்வளவாவக எடுபடவில்லை. தற்போது சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூரி பெயரை சொல்லி பொய் விளம்பரம் :

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூரியின் பெயரை சொல்லி பொய்யான விளம்பரத்தை கொடுத்த கல்வி அறக்கட்டளையை கடுமையாக சாடி இருக்கிறார் சூரி மதுரையில் இருக்கும் கல்வி நிறுவனம் ஒன்று சூரியின் பெயரில் அந்த அறக்கட்டளையை நடத்தி வருவதாக சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டனர். அதில் ‘ திரைப்பட நடிகர் சூரி நடத்தும் LM Education Trust சார்பாக பொறியியல் மற்றும் கலை கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சூரி கொடுத்த விளக்கம் :

இந்த உதவியை பெற விரும்பும் மாணவர்கள் 13/06/2022 அன்று திங்கள் காலை 10 மணிக்கு மதுரை அண்ணாநகர் அம்பிகா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ‘ என்று குறிப்பிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விளம்பரம் குறித்து விளக்கமளித்துள்ள சூரி ‘இந்த விளம்பரத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த புகைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை வடிவமைத்துள்ளனர்’

நேரில் அழைத்து எச்சரித்த சூரி :

விளம்பரங்கள் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் என சொல்லி இருக்கிறோம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம் எந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரங்கள் தந்து புனிதமான கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு என்றுமே நல்லதில்லை’ என்று கூறியுள்ளார் சூரி.

Advertisement