‘விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று’ தனது தந்தையின் 5ஆம் ஆண்டு நினைவு நாளில் சூரி போட்ட உருக்கமான பதிவு.

0
589
soori
- Advertisement -

தனது தந்தையின் புகைப்படத்தை போட்டு சூரி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூரி. இவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தில் இருந்து இவரை பலரும் பரோட்டா சூரி என்று தான் செல்லமாக அலைகிறார்கள்.

-விளம்பரம்-
soori

மேலும், ஆரம்பத்தில் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும், இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார்.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரி:

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் இந்த படத்திற்காக படு பிட்டாக மாற்றியுள்ளார். இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விடுதல் படம் பற்றிய தகவல்:

RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெளிவந்த படத்தின் போஸ்டர்களில் நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சூரி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது.

-விளம்பரம்-

சூரி நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி பிசியான வேலையிலும் சூரி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இவர் தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம், வீடியோ என பல நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் சூரி பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அது என்னவென்றால், சூரி அவர்கள் தன்னுடைய அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி புகைப்படத்தை பதிவிட்டு

அப்பா குறித்து சூரி பதிவிட்ட டீவ்ட்:

அதில் கூறியிருப்பது, ‘விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று! மீசைவைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள். அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி!’ என்று தன் அப்பாவுடைய நினைவு தினத்தை முன்னிட்டு சூரி பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த சூரியின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சூரிக்கு ஆறுதல் கூறி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement