எனக்கு போராட்டவே பிடிக்காது. ஆனால், என்னை பாண்டியராஜ் இத்தனை சாப்பிட வைத்தார்.

0
2145
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக சூரி திகழ்ந்து வருகிறார். விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் சூரி திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியல் நடிகனாக தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-
SUN TV | NAMMA VEETTU PILLAI AUDIO LAUNCH THROWBACK

NAMMA VEETTU PILLAI AUDIO LAUNCH THROWBACKசிவகார்த்திகேயன் – சூரி இடையே ஒரு நட்பு விளையாட்டு.முழு வீடியோவிற்கு: https://www.youtube.com/watch?v=3-tqUr4lOtcநம்ம வீட்டுப் பிள்ளை | மே 17 | 6.30 PM #SunTV #NammaVeettuPillai #NVPOnSunTV #NVPAudioLaunch #SunTVThrowback #Throwback

Sun TV ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಮೇ 17, 2020

இந்த படத்தில் இவருடைய பரோட்டா காமெடி காட்சி தான் வேற லெவல்ல இருக்கும். இதனாலேயே இவரை அனைவரும் பரோட்டா சூரி என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இந்த படத்தை தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, களவாணி, குள்ளநரிக்கூட்டம், மனம்கொத்திபறவை, சுந்தரபாண்டியன், கேடி ப் எல்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி, நிமிர்ந்து நில், மான் கராத்தே, ரஜினி முருகன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

தமிழில் விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் சூரி. என்னதான் தற்போது சூரி சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தாலும் அவருக்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது, வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா காமெடி தான். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் சூரிக்கு பரோட்டா என்றாலே பிடிக்காதாம்.

பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா ...

-விளம்பரம்-

அதனை விருது விழா ஒன்றில் குறியுள்ளார் சூரி, இதுகுறித்து அந்த விருது விழாவில் பேசிய சூரி, உண்மையில் எனக்கு பரோட்டா என்றால் சுத்தமாக பிடிக்காது, ஆனால், வென்னிலா கபடி குழு படத்தில் இயக்குனர் என்னை 14 பரோட்டா சாப்பிட வைத்தார். அன்று பரோட்டா சாப்பிட்டதால் தான் இன்று என் குடும்பமே சாப்பிட்டு கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement