எப்படி இருக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ – முழு விமர்சனம் இதோ.

0
791
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய நடிப்பில் வெளி வந்திருக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சொப்பன சுந்தரி. இந்த படத்தில் தீபா ஷங்கர், லட்சுமி பிரியா, கருணாகரன், சதீஷ், கிருஷ்ணன், சுனில் ரெடி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் & ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உடன் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.ஜி சார்லஸ் இயக்கியிருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய அக்கா லட்சுமி பிரியா மற்றும் அம்மா தீபா ஷங்கர் உடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருக்கிறார்கள். இதனால் ஐஸ்வர்யாவின் அக்கா லட்சுமி பிரியாவுக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து குடும்பத்தை பார்த்து வருகிறார். இந்த நேரத்தில் தான் இவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. இதை வைத்து தன்னுடைய அக்காவிற்கு திருமணம் செய்யலாம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் நினைக்கிறார்.

- Advertisement -

அந்த சமயத்தில் தான் இவரது அண்ணன் கருணாகரன் அந்த கார் தனக்கு சொந்தம் என்று பிரச்சனை செய்கிறார். இதனால் கார் போலீஸிடம் சிக்கிக் கொள்கிறது. இறுதியில் அந்த காரை வெளியே எடுத்தார்களா? அந்த காருக்குள் என்ன இருந்தது? ஐஸ்வர்யா ராஜேஷ் அக்காவின் திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம்போல் ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மிடில் கிளாஸ் பெண் ரோலில் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி, எமோஷன் என இரண்டிலுமே அவர் பின்னி எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இவரை அடுத்து வரும் லட்சுமி பிரியா வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கம்போல் காமெடியில் தீபா ஷங்கர் கலக்கி இருக்கிறார். இவருடைய வசனங்கள் எல்லாம் கைதட்டல்களை வாங்கி இருக்கிறது. இப்படி படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் கதைக்களத்தில் கவனம் செலுத்தவில்லை. பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவு தான் கொஞ்சம் படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

பல இடங்களில் தேவையில்லாமல் குளோசப் காட்சிகள் வந்திருக்கிறது. அடுத்தவருடைய பொருளுக்கு ஆசைப்பட்டால் என்ன எடுக்கும் என்பதை காமெடி கலந்த பாணியில் இயக்குனர் எடுத்திருக்கிறார். இதில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது மட்டும் இல்லாமல் படத்தில் ஆங்காங்கே வரும் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காமெடி நோக்கில் கதையை கொண்டு செல்ல இயக்குனர் முயற்சி இருக்கிறார்.

ஆனால், சுவாரசியமான கதையும் நகைச்சுவையிலும் கவனத்தை செலுத்தி இருந்தால் படம் நன்றாக வெற்றி பெற்று இருக்கும். சில இடங்களில் கதை எங்கெங்கோ செல்வது போல இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில காட்சிகள் முழுமை அடையாமலும் திணறி தடுமாறி இருக்கிறது. பல எதிர்பார்ப்புடன் இருந்து ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் என்றே சொல்லலாம்.

நிறை:

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு சிறப்பு

காமெடி கலந்த கதை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

குறை:

காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை

ஒளிப்பதிவு செட் ஆகவில்லை

கதைகளத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

ஆங்காங்கே காட்சிகள் முழுமை அடைந்ததாக இல்லை

இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் சொப்பன சுந்தரி- ஏமாற்றம்தான்

Advertisement