ஆபாசத்தின் உச்சம்.! சன் டீவியில் ஒளிபரப்பாக இருக்கும் “சொப்பன சுந்தரி” ஷோ..! வீடியோ இதோ

0
72493
Soppana-sundhari
- Advertisement -

தொலைக்காட்சியில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் “பிக் பாஸ்” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தற்போது சன் டிவி “சொப்பன சுந்தரி ” என்ற புதிய ரியாலிட்டி சோவை தொடங்கியுள்ளது.

-விளம்பரம்-

பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் “அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தனர். அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து சன் டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதுவரை உள்ளூர் தொலைக்காட்சியை காப்பி அடித்துக்கொண்டிருந்த சன் டிவி தற்போது வெளிநாட்டு தொலைக்காட்சிகளை பின்தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் அவர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று ஒரே வீட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தி யார் அழகி என்று தேர்தெடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்க இருக்கிறார்.

Prasanna

-விளம்பரம்-

வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள “சொப்பன சுந்தரி” நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த முதல் ப்ரோமோ விடீயோவிலேயே போட்டியாளர்கள் சிலர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே இப்படி என்றால் இந்த நிகழ்ச்சி பிக் பாஸை விட சுவாரசியமாக இருக்குமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement