பிரபல நடிகையாக திகழ்ந்த இவரை நினைவிருக்கா ? இப்படி எப்படி இருக்கார் பாருங்க. (வா அருகில் வா படத்தை 90ஸ் கிட்ஸ் மறக்க முடியுமா ?)

0
539
vaishnavi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகை வைஷ்ணவி.

-விளம்பரம்-

இவர் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் இவர் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் பேத்தியும் ஆவார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு வந்தது குறித்து நடிகை வைஷ்ணவி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சினிமாவில் நடிக்கணும் என்று நான் விரும்பியது கிடையாது. தேடிவந்த வாய்ப்பு தான் தலைவனுக்கோர்த் தலைவி. இந்த படத்தின் மூலம் தான் நான் சினிமாவிற்கு அறிமுகமானேன். அதில் என் கணவர் அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவாளர்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்தியாவிலே ரெண்டே ரெண்டு அக்யூஸ்ட், ஒண்ணு மோடி ஜி! ஒண்ணு அமித்ஷா – ராதாரவி பேச்சால் ஷாக்கான Bjp தொண்டர்கள்.

நடிகை வைஷ்னவி அளித்த பேட்டி:

அந்த படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் என் குடும்ப வாழ்க்கைக்கு ஓப்பனிங்க் ஆக இருந்தது. என முதல் படத்திலேயே அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஒளிவுமறைவு இல்லாமல் வீட்டில் எங்க காதலை நாங்கள் சொல்லி விட்டோம். தொடர்ந்து ரெண்டு பேரும் சினிமாவில் பிசியாக வேலை செய்தோம். பின் 1996 இல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். மூத்த மகள் பிறந்ததும் இனி சினிமாவே வேண்டாம் என்று இருந்தோன். ஆனால், நடிகர் மாதவனின் அன்புக் கட்டளையின் படி இந்த படத்தில் பணி புரிந்தேன். ஜானகி பாட்டியோட தைரியம் எங்க குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். ஆண்களுக்கு நிகராக தான் பெண்களும் இருக்கணும் என்று சொல்லிக் கொடுத்து எங்களை வளர்த்தார்.

-விளம்பரம்-

ராக்கெட்ரி பட வாய்ப்பு:

பிள்ளைகளின் எதிர்காலம், குடும்ப நிர்வாகம், பொருளாதாரம் என எல்லாமே என்னை முடிவு எடுக்க சொல்லி ஊக்கப்படுத்துவார் என் கணவர். திருமணத்திற்கு பிறகு குடும்பப் பொறுப்புகளில் மட்டுமே முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். மேலும், என் கணவர் ராக்கெட்ரி படத்தில் டெக்னிக்கல் டைரக்டரா வேலை செய்தார். மூன்று வருசத்துக்கு முன்பு என் அப்பா தவறிப் போனார். அப்போ இரங்கல் தெரிவிக்க எங்க வீட்டுக்கு மாதவன் சார் வந்திருந்தார். பொண்ணுங்க தான் வளர்ந்து விட்டங்கா, வீட்டை விட்டு நீங்க வெளியே வந்து தானே ஆகனும். நம்ம படத்தில் நீங்களும் வேலை செய்கிறீர்கள் என்று என் மேல் அதீத நம்பிக்கை வைத்து சொன்னார்.

ராக்கெட்ரி படத்தில் செய்த பணி:

எனக்கு ஆப் ஸ்கிரீன் வேலை தான் இருக்கு என்று தெரிந்ததால் சம்மதித்தேன். இந்த படம் ஒரு நேரத்தில் தமிழ், இந்தி, இங்கிலீஷில் தனித்தனியே படமாக்கினோம். எனக்கு இந்தி, குஜராத்தி உட்பட பல மொழிகள் தெரியும். அதனால் அந்த மூன்று மொழிகளையும் நடிகர்களின் உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் விஷயங்களை கவனித்து லாங்குவேஜ் சூப்பர்வைசர் பொறுப்பை எனக்கு கொடுத்தார் மாதவன் சார். எல்லா நடிகர்களையும் வரவைத்து டயலாக் மற்ற மொழிகளை சொல்லிக்கொடுத்தேன். இதற்காக ரியசல் மட்டுமே பல மாதங்கள் நடந்தது. இந்த படத்துக்காக என் கணவருடன் மும்பையிலேயே மூன்று வருடங்கள் தங்கி இருந்தேன். இந்த படத்துக்காக ஆறு வருடங்களாக மாதவன் மெனக்கெட்டார்.

ராக்கெட்ரி பட அனுபவம்:

என் கணவரும் முழுமையாக ட்ராவல் பண்ணினார். டெக்னிகல் என் கணவர், நான், டைரக்டர் என மூன்று பேரும் இருந்தோம். சூட்டிங்கில் லாங்குவேஜ், பாடி லாங்குவேஜ் சார்ந்த விஷயங்களை நான் கவனித்துக் கொண்டேன். சவுண்ட், லைட்டிங் சம்பந்தமான வேலைகளை என் கணவர் பார்த்துக்கொண்டார். டேக் முடிந்ததும் அடுத்து அடுத்து நாங்க மூணு பேரும் ஓகே சொன்ன பிறகு தான் மாதவன் சார் முடிவெடுப்பார். சரியாக பிளான் பண்ணி 60 நாட்களிலேயே ஷூட்டிங் முடித்து விட்டோம். குடும்ப நண்பர் என்பதை தாண்டி பிரமாதமான பாஸாக மாதவன் சார் என்னை ஆச்சரியப்படுத்தினார் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் வைஷ்னவி.

Advertisement