சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் படு ஸ்மார்ட்டாகவும், படத்தில் இளமையாகவும் தோற்றமளிக்க கூடிய ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளியான பேட்ட படத்தில் ரஜினியை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார் என்று ஆச்சர்யபட்டனர். இந்த நிலையில் ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினியை தாத்தா என்று குறிப்பிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த பெப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் பாருங்க : ஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.!
சௌந்தர்யாக்கும் அஸ்வினுக்கு வேத் என்ற மகன் இருக்கிறான். அவருடனான புகைப்படத்தை எப்போதும் சௌந்தர்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் இருப்பார். சமீபத்தில் சௌந்தர்யா தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் ஒரு புறம் ரஜினிகாந்தும், மற்றொரு புறம் தனது மகனும் இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு மேல், தனது தாத்தாவை போல பேரன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்டு ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் கோபமடைந்துள்ளனர்.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த பதிவிற்கு கீழ், ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘எங்கள் தலைவரை, தாத்தா என்று சொல்லாதீர்கள்’ என்றும், ஹலோ சிஸ்டர் தாத்தா லாம் உங்க வீட்ல வச்சிகோங்க ஸ்ட்ராங் மேன் சிஸ்டர் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தை கடிந்து வருகின்றனர். ஆனால், ரசிகர்களின் இந்த எந்த பத்திற்கும் பதில்லைக்காமல் இருந்து வருகிறார் சௌந்தர்யா.