ரஜினி மகள் இரண்டாவது திருமணம்.! பத்திரிகை ரெடி.! திருமண தேதி எப்போது.!

0
349

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து ஐஸ்வர்யா, மேலும், சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்க : சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!

சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் சென்றனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.

நேற்று காலை சிறப்பு தரிசனத்தில் திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர். லதா ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.