ரஜினியை வைத்து ப்ரொமோஷன், ட்விட்டருக்கே டப் கொடுக்க நினைத்த ரஜினி மகள் – இரண்டே ஆண்டில் மூடப்பட்ட நிறுவனம்

0
366
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா நடத்தி வந்த செயலி நிறுவனத்தை இழுத்து மூடப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இவருடைய இரண்டு மகள்களுமே சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படங்களை இயக்கி வருகிறார். கடைசியாக இவர் ரஜினியை வைத்து ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது இவர் வேறு ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அதேபோல் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சினிமாவில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இவர் தன்னுடைய தந்தையை வைத்து 3டி மூலம் ‘கோச்சடையான்’ என்ற படத்தை எடுத்திருந்தார்.

- Advertisement -

சௌந்தர்யா திரைப்பயணம்:

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதற்குப்பின் இந்த படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. இதை அடுத்து இவர் தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ என்ற படத்தை இயக்கி இருந்தார். முதல் பாகத்தை இவரின் அக்கா ஐஸ்வர்யா தான் எடுத்து இருந்தார். இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் பிஸ்னஸ், வெப் சீரிஸ்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சௌந்தர்யா இயக்கும் படம்:

அந்த வகையில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரியஸ் ஆக எடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பின் அசோக் செல்வனை வைத்து வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருந்தார். இதற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டது. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் நடத்தி வரும் நிறுவனத்தை இழுத்து மூடி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சௌந்தர்யா புது செயலி:

அதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘ஹூட்’ என்ற செயலியை சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிமுகம் செய்திருந்தார். இது குரல் சமூக ஊடக தளம். இதில் 15 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகள் அடங்கியிருக்கிறது. இதன் மூலம் படிக்க தெரியாதவர்கள் கூட எளிமையாக குரல் வழியாக தங்களுடைய கருத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் செயலியை உருவாக்கி இருந்தார். இதனால் facebook, twitter, whatsapp போன்ற பிரபலமான சமூக ஊடக தளங்கள் பின்னுக்கு செல்லும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

இழுத்து மூடப்பட்ட நிறுவனம்:

இந்த செயலியை ரஜினிகாந்த் தான் துவங்கி வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் மறைந்த கன்னட நடிகர் புனித் உடைய இறப்பு செய்தியை கூட இந்த செயலியில் பதிவிட்டிருந்தார்கள். இதற்கு பலருமே விமர்சித்து இருந்தார்கள். அதோடு இந்த செயலியில் தான் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய எல்லா அப்டேட்டுகளையும் சொல்லி இருந்தார். இருந்தாலும், இந்த செயலி பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இதன் பயன்பாட்டின் எண்ணிக்கையாளர்கள் குறைந்து விட்டார்கள். இந்த நிலையில் திடீரென்று இந்நிறுவனத்தை இழுத்து மூட சௌந்தர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகார அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement