மணிரத்னம் எடுப்பதாக இருந்த ‘பொன்னியின் செல்வன்’ உருவாக போகிறது.! ஆனால், ஒரு ட்விஸ்ட்.!

0
1168
Ponniyin-selvan
- Advertisement -

தற்போது உள்ள சினிமா ரசிகர்களில் அனைவரும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை படித்திருப்பீர்களா என்பது சந்தேகம் தான்.அப்படி நீங்கள் படித்திருப்பீர்கள் என்றால் ‘பாகுபலி’ என்ற கதை எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

-விளம்பரம்-

வரலாற்று சிறப்புமிக்க இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன் வரலாற்று கதைகளை எடுக்கும் கெட்டிக்காரரான மணிரத்னம் கூட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கவுள்ளார் என்று பல ஆண்டுகளாக ஒரு பேச்சும் நிலவிவருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நாவலை தயாரிக்க முன்பந்துள்ளார் ரஜினியின் மகளான சௌந்தர்யா. ஆனால், திரைப்படமாக இல்லை வெப் தொடராக. எம்எக்ஸ் பிளேயர் (Mx Player) நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 என்டர்டெயின்மென்ட் இந்த நாவலை வெப் தொடராக உருவாக்க திட்டமீட்டுள்ளனர்.

இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தொடர்
தமிழ், இந்தி,தெலுங்கு, மலையாளம், போஜ்புரி போன்ற பல மொழிகளில் வெளியாக இருகிறது. இதனை நீங்கள் பயன்படுத்தும் போனில் எம்எக்ஸ் பிளேயர் (Mx Player) மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கமுடியும்.

-விளம்பரம்-
Advertisement